உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் குறித்த தகவல் வெளியானது!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று அதன் பின்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உயர்தர பரீட்சைகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமல் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய…

Read More

பளையில் கஞ்சா விற்ற பொலிசார்

கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில்…

Read More

யாழில் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது.   அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர். கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

விஷால்-ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து விஷால், சுருதிஹாசன் நடிப்பில் ‘பூஜை’ திரைப்படத்தில் ஹரி இயக்கியிருந்தார். இந்த நிலையில். விஷால்-ஹரி கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில், ‘விஷால்-24’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.

Read More

ஜோ பைடனின் அவுஸ்திரேலிய பயணம் ரத்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  அவுஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாடுகளுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன், இன்று புதன்கிழமை ஜப்பானுக்கு பயணம் செய்யவுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில்  ஜோ பைடன் பங்குபற்றவுள்ளார்  என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து மே 24 ஆம்  திகதி…

Read More

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் வங்கடே மைதானத்தில் சந்தித்தன. இந்நிலையில் இந்த உலகக் கிண்ண தொடரில் இதுவரை ஒரு போட்டியிலேனும் தோற்காத ஒரே அணியாக இந்திய அணி, இன்று இலங்கை அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. அதேநேரம்…

Read More

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் 10 இலட்சத்தினால் அதிகரிப்பு 

கனடாவின் சனத்தொகை ஒரு வருட காலத்தில் சுமார் 10 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி கனடாவின் சனத்தொகை 39,566,248  ஆக இருந்தது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் கனடாவின் சனத்தொகை 38,516,138 ஆக இருந்தது. அதாவது, 12 மாத காலத்தில் கனடாவின் சனத்தொகை 1,050,110  பேரினால் அதிகரித்துள்ளது. இது ஒரு வருட காலத்தில் ஏற்பட்ட 2.7 சதவீதமான அதிகரிப்பாகும். கனடாவில் வரலாற்றில் 12 மாத காலத்தில் சனத் தொகை ஒரு மில்லியனுக்கும் கூடுதலான எண்ணிக்கையினால் அதிகரித்தமை…

Read More

திரையில் வெளியானது ‘SISU’: நாஜி படையை எதிர்த்து நிற்கும் தனி ஒருவன்

 நாஜி படையை எதிர்த்து நிற்கும் தனி ஒருவனின் கதையை விவரிக்கும் ‘SISU’ திரைப்படம் வெள்ளித்திரையில் உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஜல்மாரி ஹெலண்டர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். 1944-ல் வடக்கு ஃபின்லாந்தில் இந்த கதை நடப்பது போல காட்சி படுத்தப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சிப்பாயான ஆடோமி கோர்பி (ஜோர்மா டோமிலா) என்பவரை மையமாக வைத்து கதை நகர்கிறது. முதன்முறையாக ‘டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில்’ திரையிடப்பட்டது. பின்னர் கடந்த…

Read More

டெக்சாஸில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உள்பட 9 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரையும் போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீஸ் தலைவர் ப்ரயன் ஹார்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெக்சாஸ் நகரில் ஆலன் பகுதியில் ஆலன் ப்ரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில்…

Read More

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் 

காதலனுடன் சமனல வாவியை பார்வையிட வந்த யுவதியை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று…

Read More

நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு

நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்டு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 90க்கும் மேற்பட்டார் தீ விபத்தில் சிக்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Read More