நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் 

எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்.பி பதவியில் இருந்து, ராகுல்காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸார் போராட்டம்…

Read More

‘தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்” – ராகுல் காந்தி

அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக…

Read More