இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பில் ஆராய்கின்றோம் – நீதி அமைச்சர்
இலங்கையின் இறுதி கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்திடம் சரணடைந்த 12 500 விடுதலைப்புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதனை விட அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் , கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகளை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்…

