நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் 

எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்.பி பதவியில் இருந்து, ராகுல்காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸார் போராட்டம்…

Read More

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதி

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும்  சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும்இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது இல்லை எங்களிற்கே சொந்தம் துறைமுகத்தின் செயற்பாடுகளிற்கான பொறுப்பை நாங்கள் சீன வர்த்தகர்களிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொழும்பு துறைமுக அதிகார சபையினால் அதனை நிர்வகிக்க முடியாததன் காரணமாகவே…

Read More

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை

இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வருகை தர உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சேவையினை ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை…

Read More

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் நீது சாம்பியன்

நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இந்தியாவின் நீது கங்காஸ். மங்கோலியாவின் லஸ்டைகானி ஆல்டன்ட்செடக் (Lutsaikhany Altantsetseg) எனும் வீராங்கனையை 5-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் அவர். கடந்த ஆண்டு இதே பிரிவில் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை நீது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவில் 22 வயதான நீது, அனுபவம் வாய்ந்த மங்கோலிய வீராங்கனையை எதிர்கொண்டு விளையாடினார். இருந்தாலும் இந்திய வீராங்கனைகளுக்கு…

Read More

‘தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்” – ராகுல் காந்தி

அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக…

Read More

“தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று பேசியது: “நீதித் துறைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு நாப்கின்…

Read More