கழுவேத்தி மூர்க்கன்: திரை விமர்சனம்
தெக்குப்பட்டி என்கிற தென் தமிழ்நாட்டுக் கிராமத்தில் வசிக்கும் மூர்க்கசாமியும் (அருள்நிதி), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) உயிர் நண்பர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்து தனது மக்களைச் சுயமரியாதையுடன் வாழ அரசியல்படுத்துகிறார் பூமி. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நண்பனின் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கிறார் மூர்க்கசாமி. இவர்களை ஒழித்தால் அன்றி, தனது சாதி அரசியலை நடத்த முடியாது என்று அதே ஊரைச் சேர்ந்த பிழைப்பு அரசியல்வாதி முனியராஜ் (ராஜசிம்மன்) குமுறுகிறார். அதற்காகத் தனது கட்சி தலைவரை அழைத்து பிரம்மாண்ட…

