92 வயதில் 5 வது திருமணம்

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ருபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120 க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் கடந்த 1956 ஆம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட முர்டாச், 1999 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்து 3 வதாக சீனாவைச் சேர்ந்த பெண்…

Read More

மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள்,  தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்,  அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி மௌனிக்கச் செய்யப்பட்டது.  இந்த…

Read More

கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் சுமந்திரன் கலந்துரையாடல் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக  பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (22) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சுமந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஆளுநருடன் உரையாடினார்.  

Read More

மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானம்

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் நேற்று முதல் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு  நேற்று பகல் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத் இலங்கசிங்க குறிப்பிட்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மூன்றாம் இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த பழுதால் மின்வெட்டு இருக்காது என…

Read More

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பல்வேறு நோய்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் உள்ள சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா கூறுகையில், இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே இந்த நாட்களில் அவர்களுக்கு அதிக திரவங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், நிலவும் வறட்சியான காலநிலையினால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சிறுவர்களிடையே பரவலாக பரவக்கூடும் என்றும்…

Read More

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 3ஆவது சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த சடலம்

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதனை அவதானித்த பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீதான விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

திருகோணமலையில் வந்திறங்கிய தாய்லாந்து பௌத்த தேரர்கள்

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த தேரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை இயந்திரப்படகுகள் மூலமாக திருகோணமலை நகர இறங்குதுறையில் வந்திறங்கினர்.  இதன்போது பெளத்த தேரர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்பதை படங்களில் காணலாம்.

Read More

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More