இலங்கை மீனவர்களின் துயரம்
இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடிகள் நாட்டு மக்களை பெருமளவில் பாதித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் நீர்கொழும்பில் உள்ள மீனவர்களை சந்தித்து அண்மையில் உரையாடிய போது அவர்கள் தெரிவித்த விடயங்கள்.
இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடிகள் நாட்டு மக்களை பெருமளவில் பாதித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் நீர்கொழும்பில் உள்ள மீனவர்களை சந்தித்து அண்மையில் உரையாடிய போது அவர்கள் தெரிவித்த விடயங்கள்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு ஒன்று சேவையில் இல்லாததால் 8,000 இருதய நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு பிரிவுகள் உள்ளது. அதில் ஒரு பிரிவு சேவையில் இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயறிதலுக்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்கள் சேவையில் இல்லை என…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை இந்தியா சென்றுள்ளார். இன்று (12) அதிகாலை 2.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டது. இந்தியாவின் விசேட அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்கு தீர்வு காணும் முகமாக தற்போதைய பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன்,…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை இன்று வெள்ளிக்கிழமை (09) காலை பேர்த் நகரில் சந்தித்தார். இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், அதற்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்தார். அதையடுத்து, காலநிலை மாற்றம், சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்துக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (10) மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8.00 வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும்…
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (9) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் அரசாங்கம் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என தெரிவித்துள்ள பவ்ரல் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துகின்றது என குற்றம்சாட்டியுள்ளது. மலையகத்தை பத்துவருடத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 2024 ம் ஆண்டு அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் சுற்றுநிருபமொன்றை…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி சற்று முன்னர் பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (9) காலை 9 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன் ஆரம்பமான இந்த போராட்டப் பேரணி மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோஷமிட்டு வருகின்றனர்….
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07) நடைபெறும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார்.அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பாராளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.