30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம்

ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்களை மேலும் 30 ஆண்டுகள் நீட்டித்து செயல்படுத்த அந்த நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. பசுமை எரிசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவினை ஜப்பான் அரசு எடுத்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் 30 ஆண்டுகள் இயக்கத்திற்கு பின் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் 30 ஆண்டுகள் இயங்கவிடப்படும்.

Read More

கமல் தயாரிப்பில் சிம்பு: ஆகஸ்டில் படப்பிடிப்பு

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சிம்புவின் 48-வது படமான இது வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. இதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாகவும், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சிம்பு மற்றும்…

Read More

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை மறுக்கும் லங்கா ஐ.ஓ.சி.

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதைத் தவிர்க்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.ஓ.சி. அத்தகைய எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும், இது சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் ஒரு போலி செய்தி…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை நிறைவேற்றலாம் – மைத்திரி

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம். ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண…

Read More

கோர விபத்தில் மூவர் பலி

குருநாகல் – கிரிஉல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர். லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன்றும் செவ்வாய்க்கிழமை (26) போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Read More

“இந்திய வம்சாவளியினர்” எனப் பதிவிடலாம் : பதிவாளர் நாயகம்

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி   பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.  பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.  அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு…

Read More

ராஷ்மிகாவுக்கு கடும் எதிர்ப்பு

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அசைவ உணவு விளம்பரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதாக பல பேட்டிகளில் கூறிய அவர், அசைவ உணவுக்கு விளம்பரம் செய்துள்ளதை வலைதளங்களில் பலரும்…

Read More

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் – விமல் வீரவன்ச

00 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என   தேசிய சுதந்திர முன்னணியின்   தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்   வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் …

Read More

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் – நால்வர் பலி

அமெரிக்காவின் லூவில் கென்டக்கியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில் 8 பேர் காயமடைந்துள்ளனர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் வங்கியொன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வங்கியொன்றின் ஊழியர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் மூலம் அதனை நேரடிஒளிபரப்பு செய்துள்ளார். ஓல்ட் நசனல் வங்கியின் கோர்னர் ஸ்டேர்ஜன் என்ற ஊழியரே இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் போலீசார் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். 40,45 60,63 வயதுடைய நால்வர் உயிரிழந்துள்ளனர்.

Read More