Headlines

கஜேந்திரகுமாரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அவருக்கு அனுமதி – சபாநாயகர்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பொலிஸார் தங்கள் கடமைகளை செய்வதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

விஷால்-ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து விஷால், சுருதிஹாசன் நடிப்பில் ‘பூஜை’ திரைப்படத்தில் ஹரி இயக்கியிருந்தார். இந்த நிலையில். விஷால்-ஹரி கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில், ‘விஷால்-24’ என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.

Read More

இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு

2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது….

Read More

இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கி

பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் வெற்றிபெற வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்புகளுக்கு இடையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் மார்ட்டின் ரேஸருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான…

Read More

விஜேதாச, அலிசப்ரி இன்று தென் ஆபிரிக்கா விஜயம்

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து தென்னாபிரிக அரசாங்கத்திடமிருந்து அனுபவப்பகிர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இக்காரணியை இலக்காகக் கொண்டு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென்ஆபிரிக்கா செல்லவுள்ளது. இலங்கைக்கான தென் ஆபிரிக உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்சல்க்…

Read More

கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் ஆறாவது நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துறைமுகத்துடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி தளத்திலிருந்து இரும்பு திருடச் சென்ற இருவரை விசாரனை செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச மக்களால் அமைதியின்மையின்மை ஏற்பட்டுள்ளது.  இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ப்ளூமெண்டல் பகுதியை சேர்ந்தவர்களே…

Read More

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: புதின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புதின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில்…

Read More

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வீரப்பன் மகள்

கே.என்.ஆர் மூவிஸ் பட நிறுவனத்துக்காக கே.என்.ஆர்.ராஜா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்து உள்ள படம், ‘மாவீரன் பிள்ளை’. மறைந்த வீரப்பன் மகள் விஜயலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகிறார். தவிர, தெருக்கூத்து கலைஞனாக ராதாரவி நடித்துள்ளார். மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசை அமைத்துள்ளார். ஆலயமணி பாடல்கள் எழுதியுள்ளார். பிரேம் பின்னணி இசை அமைத்துள்ளார். விஜயலட்சுமி கூறுகையில், ‘சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமூகத்தில் ஒரு பக்கம் குடி, மறுபக்கம் காதல்…

Read More

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 58-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 12-வது இடமும் வகிக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார். இதில் பிரியன்ஷு ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர் செட்டில்…

Read More

விழாக்கோலம் பூண்டது இங்கிலாந்து: இன்று மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடைபெறுகின்றது. இதற்காக லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது மகனான மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள அபே தேவாலயத்தில் இன்று மிக பிரமாண்டமாக அரச…

Read More