ஆர்ப்பாட்டங்களினால் வட்டி வீதத்தை குறைக்க இயலாது – அரசாங்கம்
வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவையாகும். இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் கிடையாது. அதற்கான அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி…

