தாய் பால் கொடுக்க மறுத்ததால் யாழில்உயிரிழந்த குழந்தை

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

Read More

காலநிலை முன் எச்சரிக்கைக்கான பிரிவு ஜனாதிபதி தலைமையில் அறிமுகம்

அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேலும் பாதுகாக்கும் விதமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் SLT Mobitel, Hutch, Dialog, Airtel உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து முழுமையான அனர்த்த முன் எச்சரிக்கை பொறிமுறையொன்றை வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…

Read More

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இன்று (18) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இடம்பெறும் முதலாவது மூலோபாய உரையாடல் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த…

Read More

ஜெனிவாவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து அவதானம்

2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பிரதி உயர்ஸ்தானிகர் நாதா அல் நஷீப் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு…

Read More

யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும்…

Read More

நான் ரொனால்டோவின் ரசிகன்: விக்கெட் கொண்டாட்டம் குறித்து பதிரனா பதில்

நான் கால்பந்து வீரர் ரொனால்டோவின் தீவிர ரசிகன் என்று சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலராக உருவாகி வரும் மதிஷா பதிரனா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்…

Read More

கொடைக்கானலில் தொடங்கியது சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு

நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி என தெரிகிறது. அரத்தர், வெண்காட்டர்,…

Read More

செர்பியாவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம்

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று (4) பிற்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர், நகரும் வாகனத்தில் இருந்து தானியங்கி ஆயுதத்தால் துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த நபரை பொலிஸார் தேடி வருவதாக…

Read More

உலகளாவிய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளினால் கூடுதல் பங்களிக்க முடியும்

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியதுடன், மாநாடு தொடங்கும் முன், இதில் பங்கேற்ற அனைத்து…

Read More

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.   இதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான 5.2 மில்லியன் டொலர் மானியம் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் கொரிய பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்படவுள்ளன. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள சந்திரிகா வாவி மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள கிரி…

Read More