மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.  இதன்மூலம் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது.  யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தனிநபர் சட்டமூலமாக அண்மையில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

Read More

கடத்தப்பட்ட படகை மீட்க தீவிர முயற்சி

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட  லோரென்சோ புதா 4  நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது. அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் குறித்த படகு கடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 6 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

சாரா ஜஸ்மின் இறப்பு உறுதியானது

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மினும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாவது முறையாக பெறப்பட்ட நுண்ணிய மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ மாதிரிகள்…

Read More

மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா

அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார். காலிறுதியில் அனஸ்டேசியா போதபோவாவுடன் மோதிய ஜெஸ்ஸிகா 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஜெஸ்ஸிகா 6-3 என 2வது செட்டை கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீஸ் ஆட்டத்தை தக்கவைத்து புள்ளிகளைக்…

Read More

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் அலெக்ஸ் மரணம் – நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது….

Read More

காசாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ள 17 இலங்கையர்கள்

இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முழுமையான போர் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தொடர்ந்து காசா பள்ளத்தாக்கில் சிக்குண்டுள்ளனர். இலங்கையர்கள் தற்போது தென்காசாவில் தஞ்சமடைந்துள்ளனர்,ஆனால் எகிப்திற்கு செல்லும் ரபா எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில் இலங்கை அதிகாரிகள் உள்ளனர். எகிப்திற்கு செல்வதற்கு இதுவே ஒரே வழி மேலும் இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரேவழியாக இது காணப்படுகின்றது. மூன்று குடும்பங்களை சேர்ந்த…

Read More

‘ஃபர்ஹானா’ படத்தை திரையிட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் எதிர்ப்பு

‘ஃபர்ஹானா’ திரைப்படத்தை திரையிட தமிழக காவல் துறை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹித் ஜமாத் தலைவர் இப்ராஹிம் சபீர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட ‘புர்கா’ என்ற திரைப்படம்…

Read More

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களில் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட…

Read More

சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் ‘யூத் ஐகான்’ விருது பெற்ற தனுஷ்

இந்திய மத்திய அரசின் சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் ‘யூத் ஐகான்’ விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதினை வழங்கினார். தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் நேரடியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தான் சார்ந்துள்ள திரைத்துறையில் நடிகர் என்ற வட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இயங்கி வருகிறார் தனுஷ். இந்தச் சூழலில்…

Read More

‘சனல் 4 ‘ செய்திச் சேவையின் காணொளி : பேராயரின் விசேட கோரிக்கை

பிரித்தானியாவின்  ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். இந்த விசாரணை  சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற…

Read More