நீண்ட தூர வீச்சுடைய ஏவுகணையை ஏவிய வட கொரியா

வடகொரியா இன்று நீண்டதூர வீச்சுடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை ஏவியுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பிரதமருக்கு இடையிலான பேச்சுவார்த்தை  இன்று நடைபெறவுள்ள நிலையில் வட கொரியா இந்த ஏவுகணையை ஏவியுள்ளது. வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிலுள்ள சுனான் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்தளக தென் கொரியாவின கூட்டுப்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனவும் அவர் கூறியுள்ளார்.   இந்த ஏவுகணை 6.000 கிலோமீற்றர் உயரத்துக்கு…

Read More

தொழிற்சங்க நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக 15 ஆம் திகதி ரயில்வே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் பிற்போடப்பட்டிருந்தன.  இதன் காரணமாக ரயில்கள் மூலம் முன்பதிவுகளை மேற்கொண்டு ஆசனங்களை ஒதுக்கி ரயில் நிலையங்களுக்கு வருகை தந்திருந்தசுற்றுலாப் பயணிகள் பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.   இதனிடையே, நுவரெலியாவிற்கு பஸ்கள் மூலம் வருகை தந்திருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் சிலர் நாணு ஓயாவிற்கு சென்றுள்ளதோடு…

Read More

சினிமா வாழ்க்கையை பணயம் வைக்கும் சாய் பல்லவி

கிளாமர் இல்லாமல் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. நடிப்பு மட்டுமின்றி இவருடைய நடனத்திற்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கடந்த வருடன் இவர் நடிப்பில் கார்கி படம் தமிழில் வெளிவந்தது. மேலும் தெலுங்கு விரடா பருவம் படத்தில் நடித்திருந்தார். இதில் கார்கி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த படம் இந்நிலையில், அடுத்ததாக சாய் பல்லவி நடக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவி…

Read More

IMF கடன் வசதியைப் பெற ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கு நன்றி -ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம்,  ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.  இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன்…

Read More

தொழிற்சங்க போராட்டம் – மக்கள் அவதி

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலையில் நேற்று 14 ஆம் திகதி இரவு புகையிரத சாரதிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்திற்கான இரண்டு இரவு நேர புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனை அடுத்து புகையிரதத்தில் பயணிப்பதற்காக ஹட்டன்…

Read More

இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தயார்

கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது. கொழும்பு – மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச்…

Read More

யாழில் வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உயிர்ழந்த இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பில் மனைவி பிள்ளைகள் சம்பவத்தில் நகைக்கடையில் பணிபுரிந்த நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்த தகவல்…

Read More

இலங்கையின் கடன்வழங்குநர்கள் இணைந்து செயற்படவேண்டும் – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இரு தரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் இணைந்து செயற்படவேண்டும் எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பகிரங்ககடிதமொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் தங்களிற்குள் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் இதன் மூலம் வங்குரோத்து நிலையில் சிக்குண்டுள்ள நாடு அதிலிருந்து மீள்வதற்கான அடுத்த கட்டநிலையை உருவாக்கவேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா சீனா பாரிஸ்கிளப் ஆகியன உத்தரவாதம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்…

Read More

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மேலும் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.தனியார் மற்றும் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும் விற்பனை விலை 345 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அட்டவணையின்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 319 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

Read More

கிம் ஜாங் உன் குறித்து இணையத்தில் தகவல் தேடியவருக்கு மரண தண்டனை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த,…

Read More