மாசடைந்த நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு 8 ஆம் இடம்

அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8 ஆம் இடம் கிடைத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் உலக நாடுகளின் காற்று தரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2022 -ல் உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா ஐந்தாமிடத்தில் இருந்தது….

Read More

இம்ரான் கானை கைது செய்யும் தடை நீட்டிப்பு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீஸார் கைது செய்வதற்கு இன்று காலை 10 மணி வரை தடை விதித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்ததாக தொடரப் பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸார் நேற்று லாகூரில் உள்ள இம்ரான் கான்…

Read More

இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்

இந்திய கால்பந்து அணி வரும் 22 முதல் 28-ம் தேதி வரையில் கிர்கிஸ்தான், மியான்மர் அணிகளுடன் முத்தரப்பு கால்பந்து தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் சிவகங்கை, கண்டனூரை சேர்ந்த சிவசக்தி நாராயணன் இடம்பிடித்துள்ளார். அவரை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இந்த தொடர் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்காக சுமார் 23 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் பட்டியலை நேற்று அணியின் தலைமை பயிற்சியாளர்…

Read More

இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 17-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜாங் ஒய் மானை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 17-21, 11-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல்…

Read More

இழுத்தடிக்கும் ஏகே 62 அறிவிப்பு

ஏகே 62 படத்தின் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் நெடு நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த மாதம் இறுதியிலாவது அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது ஏகே 62 அறிவிப்பு வெளிவர ஏன் தாமதமாகிறது என்ற காரணம் வெளிவந்துள்ளது. இதற்கு எல்லாம் அஜித் தான் மூல காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது அஜித் மற்றும் லைக்காவுக்கு முதலில் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காத காரணத்தினால் அவரை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை போட்டுள்ளனர். மகிழ் திருமேனியின் கதை அஜித்துக்கு…

Read More

வசமாய் மாட்டி கொண்ட சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் இன்றைய இளசுகளின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார். முதலில் இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது தென்னிந்திய சினிமாக்களிலும் தலை காட்டுகிறார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த நடிகை என்று கூட இவரை சொல்லலாம். சன்னி லியோன் தன்னுடைய இளமைக் காலங்களில் அடல்ட் மூவிகளில் நடித்து பிரபலமடைந்தவர். அது எல்லாம் தன் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களாக நினைக்கிறேன் என்று சொல்லி முடித்து விட்டார். தற்போது திரைப்படங்களில் மட்டுமே நடித்த…

Read More

கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது. கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் பெருங்கடலில் அரசுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியானது. படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால்  அடுத்தடுத்து விமர்சனங்கள்  கொஞ்சம் மோசமாக வர படத்தின் வசூலும் குறைந்தது. தற்போது படம் அகிலன் திரைப்பயணத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியின்…

Read More

இலங்கை சந்தையில் புதிய மோட்டார் சைக்கிள்

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை வங்கியின் முழுமையான…

Read More

இலங்கையில் தமிழர்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர். நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு எவ்வாறான பாடங்களை…

Read More

இலங்கையில் ரஷ்யர்களின் வருகை அதிகரிப்பு

மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள நிலையில் 12,762 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து…

Read More