ரயிலுடன் மோதுண்ட கார்; இருவர் பலி

காலி – கொக்கலையில் ரயில் கடவையில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது. ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தோட்டை புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் கார் மோதியுள்ளது. காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய அவருடைய பாட்டியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அஹங்கம பகுதியை…

Read More

T-56 ரக துப்பாக்கி காணாமல் போன சம்பவம்- இருவர் கைது

பனாகொட இராணுவ முகாமின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 90 தோட்டாக்கள் அடங்கிய T-56 ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாப் பைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும், குறித்த நபருக்கு உதவிய மற்றுமொரு இராணுவ சார்ஜென்ட்டும் கைது…

Read More

கனடாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கும் 700 இந்திய மாணவர்கள்

சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. கனேடிய விசா பெறுவதற்காக, கனேடிய கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட கடிதங்கள் போலியானவை எனத் தெரியவந்தமையே இதற்கான காரணம்.  கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் இம்மாணவர்களுக்கு நாடு கடத்தல்; அறிவித்தலை வழங்கியுள்ளதுதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இம்மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரிலுள்ள முகவர் ஒருவர் ஊடாக 2018, 2019 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்கு சென்றவர்கள். இதற்காக மேற்படி…

Read More

3 வல்லரசுகள் உருவாக்கும் அணுசக்தி நீர்மூழ்கி படை

இந்திய – பசிஃபிக் பிராந்தியத்தில் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அது குறித்த விவரங்களையும் அந்நாடுகள் வெளியிட்டுள்ளன. ஆக்கஸ் என அழைக்கப்படும் இந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தப்படி, ஆஸ்திரேலியா முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பெறுகிறது. குறைந்தபட்சம் 3 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் உருவாக்கிய ரோல்ஸ்-ராய்ஸ் அணுஉலைகளை உள்ளடக்கிய அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்…

Read More

யாழில் மாணவர்களை இலக்கு வைக்கும் பாலியல் துஷ்பிரயோக கும்பல்

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் ,…

Read More

நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read More

முல்லைத்தீவை சேர்ந்த 17 பேர் மட்டக்களப்பில் கைது

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான…

Read More

கிளிநொச்சியில் கடந்த போகத்தில் 59103 மெற்றிக் தொன் நெல் அறுவடை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் 59 ஆயிரத்து 103 மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர் பாசன குளங்களின் கீழும் மானாவாரி பயிர் செய்கை நிலங்களின்  கீழும் இம்முறை மொத்தமாக 26 ஆறாயிர்த்து 582 கெக்ரேயர் நிலப்பரப்பில்  காலப்போக நெற்செய்கை  மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள்…

Read More

மீண்டும் இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழு இன்று முற்பகல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இச்சந்திப்பின் போதுஇ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான நிதி இதுவரை நிதியமைச்சினால் விடுவிக்கப்படாததைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு கோரி மீண்டும் திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு பிணை

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில்  பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வழக்கின் பிரதிவாதியான பாத்திமா ஹாதியாவும், பிணைதாரர்களும் வௌிநாடு செல்ல தடை விதித்து…

Read More