விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கிய 3 வீரர்கள்: மாற்று விண்கலத்தை ஏவிய நாசா

மாஸ்கோ : விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கியுள்ள 3 வீரர்கள் பூமிக்கு திரும்பும் வகையில் மாற்று விண்கலத்தை நாசா ஏவியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் MS-22 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி வீரர் Francisco Rubio, ரஷ்ய விண்வெளி வீரர்கள் Sergey Prokopyev, Dmitry Petelin…

Read More

எதிர்பார்ப்பில் லியோ…

மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின் விஜய்யுடன் கைகோர்த்த இவர் மாஸ்டர் எனும் படத்தை இயக்கி, விஜய்யின் கேரியரில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்திருந்தார். முழு நேர குடிகாரனாக நடித்திருந்த விஜய் ரசிகர்களின் கண்களுக்கு புதிதாக தெரிந்தார். அவருடைய கதாபாத்திர பழக்கவழக்கம் கூட முற்றிலும் புதிதாக இருந்தது. காப்பியா? இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த இந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் படத்தில் இருந்து…

Read More

தென் கொரியாவில் குறையும் திருமணங்கள்

தென் கொரியாவில் கடந்த ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பிறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ”2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு. திருமணங்கள் குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட…

Read More

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் நிகத் ஜரீன் வெற்றி

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகத் ஜரீன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 50 கிலோ எடைப் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் நிகத் ஜரீன், அஜர்பைஜானின் அனகானிம் இஸ்மயிலோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே நிகத் ஜரீன் ஆதிக்கம் செலுத்தினார். அவரது பஞ்ச்களில் 2-வது ரவுண்டிலேயே அனகானிம் இஸ்மயிலோவா நிலை குலைந்தார். இதனால் நிகத் ஜரீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது….

Read More

அரசு 13 ஐ முழுதாக அமுல்படுத்த சர்வதேச அழுத்தம் மிக அவசியம். கனடா, ஆஸி. தூதுவர்களிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வீட்டுக்கு நேற்று மாலை 4.30 மணிக்குச் சென்ற இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். அதையடுத்து மாலை 5.30 மணிக்குச் சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸும் சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

தேர்தலை நடாத்த அரசை வலியுறுத்துங்கள் – ஐ நாவை கோரிய சஜித்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தல்களை நடாத்துவதன் ஊடாக இந்நாட்டு மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஐநாவின் கூடிய ஈடுபாட்டின் அவசியத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Read More

பீபா தலைவராக ஜியானி இன்பன்டினோ மீண்டும் தெரிவு

சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA – பீபா) தலைவராக ஜியானி இன்ஃபன்டினோ மீண்டும் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் நடைபெறும் பீபாவின் 73 ஆவது வருடாந்த மாநாட்டில், பீபா தலைவராக 3 ஆவது தடiவாக இன்ஃபன்டினோ போட்டியின்றி தெரிவானார்.  இதன் மூலம் மேலும் 4 வருடங்களுக்கு – 2027 ஆம் ஆண்டுவரை – அவர் இப்பதவியில் நீடிக்க முடியும்.    52 வயதான ஜியானி இன்ஃபன்டினோ இத்தாலிய பெற்றோரின் மகனாக சுவிட்ஸர்லாந்தில் பிறந்தவர்….

Read More

பௌத்தமதகுருமாரை சந்தித்து 13 குறித்து பேச தயார் – விக்னேஸ்வரன்

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன் பதிலுக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தமதகுருமார்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து பேசுவதை நிறுத்தியுள்ளார் என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமீபத்தைய யாழ்ப்பாண விஜயத்தின் போது ஜனாதிபதி…

Read More

சாகுந்தலம் எனக்கு நெருக்கமான படம் – சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா, ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஏப். 14ம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள்….

Read More

ஜப்பானின் மேற்கு கடலில் வீழ்ந்த வட கொரியாவின் ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile) வட கொரியா ஏவியுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் இடையே முக்கியத்தும் வாய்ந்த கலந்துரையாடலொன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. நீண்ட தூர ஏவுகணையொன்று நேற்று முன்தினம்(14) காலை ஏவப்பட்டதை ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜப்பானின் மேற்குக் கடலில் வீழ்ந்துள்ளது.

Read More