திட்டமிட்ட இனவழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் – பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு

இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பின் சார்பில் உரையாற்றிய நிஷாந்தி பீரிஸ் இதுபற்றி மேலும் கூறியதாவது: தமிழீழ மக்கள் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருவருடகாலமாக வடமாகாணத்தின் தனியொரு மாவட்டத்தில் 20 இற்கும்…

Read More

விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச்சாட்டில் ஒன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது.

Read More

அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெய்ன் ஓய்வு 

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிம் பெய்ன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இனறு அறிவித்தள்ளார். அவுஸ்திரேலிய மாநில அணிகளுக்கு இடையிலான ஷீபில்ட் ஷீல்ட் கிண்ணப் போட்டிகளில், குயின்ஸ்லாந்து மாநில அணிக்கு எதிராக தாஸ்மேனியா மாநில அணி சார்பில் விளையாடிய பின்னர் 38 வயதான  பெய்ன் ஓய்வு பெற்றார். ஹோர்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி இன்று முடிவடைந்தது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களையும்…

Read More

ஶ்ரீ ரங்கா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Read More

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதிக்கு பிணை

மட்டக்களப்பு (மீனகயா) புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிணை கிடைத்ததும் இன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை நன்னடத்தை உத்தியோகத்தர் விடுத்த கோரிக்கையை அடுத்து, குழந்தையின் போசாக்கு தேவையை கருத்தில்…

Read More

ஆப்பிரிக்க புயலால் 326 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 326 பேர் பலியாகினர். புயல் பாதிப்பு குறித்து மலாவி தேசிய பேரிடர் மேலாண்மை கூறும்போது, “பிரெட்டி புயலால் மலாவியின் தென்பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. பல மாவட்டங்கள் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. புயலுக்கு இதுவரை 326 பேர் பலியாகி உள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் பாதிப்பு குறித்து மலாவியைச் சேர்ந்த பெண்…

Read More

யாழ். மாவட்டத்தில் வறுமையில் 1,814 கர்ப்பிணிகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  பருத்தித் துறைப் பிரதேச செயலகத்தில்  226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச…

Read More

உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்பும் போலந்து

சோவியத் காலத்தைச் சேர்ந்த 4 மிக் ரக போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.  எதிர்வரும் சில நாட்களில் இவ்விமானங்கள் அனுப்பப்படும் என போலந்து ஜனாதிபதி அன்ட்ரெஜ் டுடா தெரிவித்துள்ளார்.  கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமான பின்னர், உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்பும் முதலாவது நேட்டோ அங்கத்துவ நாடு போலந்து ஆகும். இது உக்ரேனின் வான்பலத்தை அதிகரிக்கும் என்ற போதிலும், யுத்தத்தில் இது தீர்க்கமான பங்காற்றும் என எதிர்பார்க்கப்படவில்iலை.   மேலும் பல நாடுகள் போலந்தை…

Read More

இலங்கை வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கான காரணம் – மத்திய வங்கியின் ஆளுநர்

நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட 02 முக்கிய காரணங்களை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிப்படுத்தினார். இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற உரையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, புதிய சட்டத்தின் கீழ் உள்ள முக்கிய நோக்கங்களில் ஒன்று பணக் கட்டுப்பாடு. அதற்காக நாணயக் கொள்கை சபை செயல்பட்டு வருகிறது. 2020 முதல், மத்திய வங்கியில் கருத்து மாற்றம்…

Read More

மருத்து தட்டுப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சமூகமளிக்காமையால், இந்த விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை…

Read More