அரசியல் கைதி விடுதலை

2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர்   விடுதலை செய்யப்பட்டார்.  விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக  தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் செல்லையா சதீஸ்குமார் இன்று  விடுதலை செய்யப்பட்டார்.  கடந்த 15 வருடகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. செல்லையா சதீஸ்குமார் உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதியினால்…

Read More

பூமியிலிருந்து மெல்ல விலகும் நிலவு

பூமியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீ.விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்துவருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கைக்கான இந்திய உதவிகள் இயல்பானது – ஜெய்சங்கர் 

இலங்கை நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது இந்தியா அதற்கு உதவுவது இயல்பான விடயம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  என தெரிவித்துள்ளார். ’’Blood is thicker than water’என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாகயிருப்பதற்கு என்ன செய்யலாம் என இந்தியா சிந்திப்பது இயல்பான விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையின் பின்னர் அயல்நாடுகள் நெருக்கடியில் உள்ள போது இந்தியா அதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது என…

Read More

தேயிலை தொழிற்சாலை எரிந்து நாசம்

நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில்,  பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு…

Read More

ஜனவரியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – ரணில் இரகசிய திட்டம்

உத்தேச உள்ளுராட்சி மன்ற தேர்தலை மேலும் ஒருவருட காலத்திற்கு ஒத்திவைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஜனாதிபதி தேர்தலை 2024 ஜனவரி மாதம் முதல் வாரத்தில்  நடத்துவதற்கான தீர்மானத்தை அரச உயர் மட்டம் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான கால எல்லைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு கிடைக்கப்பெறுகின்றது. அதன் பிரகாரம்…

Read More

புகழ்பெற்ற ‘ஜான் விக்’ படத்தின் முக்கிய நடிகர் மரணம்

ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு Keanu Reeves நடிப்பில் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2019ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது. மேலும் தற்போது இப்படத்தின் நான்காம் பாகம் வருகிற 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்ஷன் திரைப்படங்களில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும். இப்படத்தில் Charon எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் Lance Reddick….

Read More

 ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது ஆஸ்கர் விருது வென்று ‘நாட்டு நாட்டு’ பாடலின் ட்ரேட்மார்க் நடன அசைவுகளை போட்டு மகிழந்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. அதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர்…

Read More

சீன அதிபர் ரஷ்யா பயணம்

பெய்ஜிங்: மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை (20) ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதன் ஓராண்டு நிறைவை ஒட்டி சீன அரசு தரப்பில் கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து…

Read More

‘சிஸ்டர் சிட்டி’ மோசடி – 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய கைலாசா

நியூ ஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகரை ஏமாற்றியதற்காக நித்யானந்தா மற்றும் அவரது கற்பனை நாடான “கைலாசா” மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக,…

Read More

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து முட்டை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது. குறித்த முட்டை இருப்புக்கள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ…

Read More