இலங்கையில் நிலநடுக்கம்

இலங்கையில் கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

நயன்தாராவின் 75-வது படம் பூஜையுடன் தொடக்கம்

நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கனெக்ட்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நயன் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து ‘இறைவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் டிரைடண்ட் ஆர்ட்ஸ்…

Read More

IND vs AUS | இந்திய பந்துவீச்சை சிதறடித்த மார்ஷ், 11 ஓவரில் ஆட்டத்தை முடித்த ஆஸி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில்…

Read More

எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது – ஜெய்சங்கர்

இந்தியா டுடே குழுமம் சார்பில் டெல்லியில் கடந்த இரு நாட்களாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய, சீன உறவு சவாலான, அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், படைகள் வாபஸ் நடவடிக்கைகளுக்குப் பிறகும் நிலைமை சீராகவில்லை. இந்திய ராணுவத்தின் கணிப்பின்படி, எல்லையில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. சீனாவின் புதிய வெளியுறவு…

Read More

உக்ரைனின் மரியுபோலில்  ரஷ்ய அதிபர் புதின்

மரியுபோல்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக, மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு புதின் திடீரென பயணம் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. சனிக்கிழமை இரவு மரியுபோல் பகுதிக்கு காரில் சென்ற புதின், அங்கிருந்த மக்களுடன் உரையாடியதாக ரஷ்ய அரசு ஊடகம்…

Read More

மஹிந்தவின் ஆட்சியே இலங்கையின் தோல்விக்கு காரணம் – சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பித்த ஊழல் , மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையிடப்பட்டமையின் காரணமாகவே இன்று இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றுவது கடினம் என்ற போதிலும் , எம்மால் அதனை செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , நான் நீண்ட காலமாக அரசியலிலிருந்து விலகியிருந்தேன். கொள்ளையர்களுடன் அரசியலில் ஈடுபட முடியாது என்பதால் 2005ஆம் ஆண்டிலிருந்தே நான் விலகியிருந்தேன். 2015இல்…

Read More

இலங்கையில் 40 அரச நிறுவனங்களை மூட திட்டம்

இலங்கையில் சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

Read More

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை

மியான்மரில் மடாலாயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மியான்மர் ராணுவ செய்தித் தொடர்பாளர் சா மின் துன் கூறும்போது, “நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, கரேனி நேஷனலிட்டிஸ் டிஃபென்ஸ் ஃபோர்ஸ் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் அங்கு நுழைந்தனர். பின்னர் கிளர்ச்சியாளர்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலே 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் புத்த…

Read More

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு வீட்டை எரித்த கணவன்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று மொரட்டுவையில் பதிவாகியுள்ளது. மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ​​கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது…

Read More

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது

எல்பிட்டிய பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன்,…

Read More