பட வாய்ப்பு இல்லாத ஸ்ரீதிவ்யா

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் பெரிய ஹிட் ஆனதால் ஸ்ரீதிவ்யா அதிகம் பிரபலம் ஆனார். அதற்க்கு பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா. தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதுவும் இல்லை. மேலும் அவர் சமீபத்தில் மலையாளத்தில் ப்ரித்விராஜின் ஜனகனமன படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள்…

Read More

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல அதிர்ச்சியளிக்கும் வகையில் நகைகள் திருட்டு போயுள்ளது. 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் திருட்டு போய் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று பணியாளர்கள் தான் திருடியிருப்பார்கள் என சந்தேகித்து…

Read More

மகளிர் உலக குத்துச்சண்டை

நீத்து, பிரீத்தி முன்னேற்றம் மகளிர் உலக குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் நீத்து கங்காஸ், பிரீத்தி, மஞ்சு பாம்போரியா ஆகியோர் முன்னேறியுள்ளனர். டெல்லியில் நேற்று நடைபெற்ற மகளிர் 48 கிலோ பிரிவில் நீத்து கங்காஸ், கொரியாவின் டோயான் காங்கையும், 54 கிலோ பிரிவில் பிரீத்தி, ருமேனியாவின் லாக்ராமியோராவையும், 66 கிலோ பிரிவில் மஞ்சு பாம்போரியா நியூஸிலாந்து கார் வார்ராவையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

Read More

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போபண்ணா ஜோடி சாம்பியன்

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹண் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-மேட் எப்டன்ஜோடியும், நெதர்லாந்தின் வெஸ்லிகூல்ஹாஃப்-பிரிட்டனின் நீல் ஸ்பக்ஸ்கி ஜோடியும் மோதின. இதில் போபண்ணா-எப்டன் ஜோடி 6-3, 2-6,…

Read More

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 3-வது வாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 21 முதல் 25-ம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். பிரதமரின் பயண தேதி விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும். அமெரிக்க பயணத்தின்போது அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர்…

Read More

எல்லையில்லா சேவை நோக்கம் கொண்ட நாடு கைலாசா:நித்தியானந்தா

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி,2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். அந்நாட்டுக்கு என்று தனிக் கொடி, பாஸ்போர்ட் எல்லாம் வெளியிட்டார். கைலாசாவில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்கலாம் என்று தெரிவித்தார். கைலாசாவுக்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதையொட்டி, சமீபத்தில் அவரது சிஷ்யைகள் சிலர், ஐநா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியது கவனம் பெற்றது. ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள்…

Read More

கைது செய்யப்படுவேன் – டொனால்ட் ட்ரம்ப்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) தான் கைது செய்யப்படக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆபாசப்பட நடிகை ஒருவருடன் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுவது தொடர்பில், அந்நடிகையை மௌனம் காக்கச் செய்வதற்காக, 2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்  ட்ரம்ப் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு விசாரணை தொடர்பிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார். தான் ஸ்தாபித்த…

Read More

கபரகலை பெருந்தோட்டப்பிரிவில் மண்சரிவு : 64 குடும்பங்கள் பாதிப்பு

பண்டாரவளைப்பகுதியின் கபரகலை பெருந்தோட்டப்பிரிவில்  ஏற்பட்ட மண்மேடு சரிவில் 7 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியிருப்பதோடு, 64 குடும்பங்களைச்சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுக்கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  மேற்படி பெருந்தோட்டப்பிரிவின் இலக்கம் 3 தமிழ் வித்தியாலய கட்டிடத்தொகுதியிலேயே, பாதிக்கப்பட்ட 212 பேரும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) இரவு ஏற்பட்ட மேற்படி அனர்த்தத்தினால் பலத்த காயங்களுக்குள்ளான 7 பேரில் நால்வர் கொஸ்லந்தை அரசினர் வைத்தியசாலையிலும்,  மூவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கபரகலை பெருந்தோட்டப்பிரிவில்  இரு…

Read More

பெண்களே கோட்டாபயவை விரட்டினர்

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஶ்ரீலங்கா…

Read More

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மூன்றாம் இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த பழுதால் மின்வெட்டு இருக்காது என…

Read More