அமெரிக்கா மற்றும் தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி

வடகொரியா மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இராணுவத்தினர் கூட்டு பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர். வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க நட்புநாடான தென்கொரியா வடகொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையில், தனது இராணுவ பலத்தை பெருகிவருகிறது. இந்நிலையில்அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக விமானப்படை ஹெலிகாப்ட்டர்கள் மூலம் ஏவுகணைகளை இடம் மாற்றும் பயிற்சியில் இருநாட்டு வீரர்கள் ஈடுபட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து…

Read More

தாய்லாந்து பாராளுமன்றம் திடீரென கலைப்பு

தாய்லாந்து பாராளுமன்றத்தை அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓ-சா இன்று (20) கலைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.  முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத் சான் ஓ-சா, 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இராணுவப் புரட்சியின் பின்னர் பிரதமரானார். முன்னாள் பிரதமரான கோடீஸ்வரர் தக்சின் ஷினவாத்ராவின் மகளான யிங் லக் ஷினவாத்ரா பிரதமராக பதவி வகித்தபோது மேற்படி இராணுவப் புரட்சி நடத்தப்பட்டமை குறிப்பிடத்கத்கது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் திகதியை…

Read More

2024 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணில் திட்டம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களை கொண்டு சபைகளை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது. உள்ளூராட்சி மன்றங்கள்…

Read More

தாய் பால் கொடுக்க மறுத்ததால் யாழில்உயிரிழந்த குழந்தை

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

Read More

இலங்கைக்கு 36 000 மெட்ரிக் தொன் உரத்தை வழங்கிய அமெரிக்கா

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவில் வழங்கப்பட்ட 36 000 மெட்ரிக் தொன் உரத்தை சிறுபோகத்திற்காக ஐ.நா. உணவு , விவசாய ஸ்தாபனம் விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது. ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களுக்கிடையிலான சிறுபோகத்திற்கும் , அதற்கு அடுத்து வரும் பயிர்செய்கைப் போகங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிக நெல் விவசாயிகளுக்கு இந்த உரம்  இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.  நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கு தேவையான அளவின் அடிப்படையில் உரம் வழங்கப்படும்….

Read More

குவைத்தில் எண்ணெய்க் கசிவு – அவசரநிலை பிரகடனம்

குவைத்தில் தரைப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக குவைத் ஒயில் நிறுவனம் இன்று அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. குவைத்தின் மேற்குப் பகுதியில் இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குவைத் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும்.  இவ்விபத்தினால் எவரும் காயமடையவில்லை எனவும், நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேறியதாக கண்டறியப்படவில்லை எனவும் குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்தள்ளது.

Read More

பிரான்சில் குப்பை மலை: மக்கள் அவதி

பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64 ஆக மாற்ற வழிவகை செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த மசோதாவுக்கு அந்த நாட்டின் மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களும் கடந்த சில தினங்களாக தங்களது…

Read More

பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்துங்கள் – ஜனாதிபதிக்குச் சிறீதரன் எம்.பி. கடிதம்

யாழ்., நெடுந்தீவு – வெடியரசன் ஆலயம் பௌத்தமயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் இடங்களில் பௌத்த அடையாளங்களான விகாரைகளையும், புத்தர் சிலைகளையும், அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை,…

Read More

கனாடா பொலிசாரால் தேடப்படும் இரு தமிழர்கள்

கனடாவின் – டொராண்டோவில் பொலிஸார் தேடப்படும் இரண்டு நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். அதன்படி 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகியோர் துப்பாக்கியை வைத்திருந்ததாக தலா மூன்று குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மேலும் இருவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். டொராண்டோவைச் சேர்ந்த 36 வயதான ஜஹ்மல் பால்மர் மற்றும் பால் வில்லியம்ஸால் அறியப்படும்…

Read More

நாட்டு மக்களை மரணப்படுக்கைக்கு எடுத்துச்செல்லும் அரசு
சஜித் சாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்திருக்கும் ஒப்பந்தம் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை வாழச்செவதற்கு பதிலாக மக்களை மரணப்படுக்கைக்கு எடுத்துச்செல்லும் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தபோது மக்களை வாழச்செய்யும் எந்த நிவாரணமும் துண்டிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவர் அங்குதொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு நாட்டை இயக்குவதற்கான அனைத்து எஞ்ஜின்களும் இயங்காத நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம்…

Read More