இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம்…

Read More

‘தசரா’ படக்குழுவுக்கு 130 தங்க நாணயங்கள் – கீர்த்தி சுரேஷ்

‘தசரா’ படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு 130 தங்க நாணயங்கள் வழங்கி நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, ஷைன்டாம் சாக்கோ, தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது….

Read More

கணவரைப் பிரிகிறார் நிஹாரிகா?

தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகையான இவர், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள். நாகபாபு, தமிழில் ‘விழித்திரு’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நிஹாரிகா, ஆந்திர போலீஸ் அதிகாரி பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு, உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சைதன்யா, தனது…

Read More

 ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும்: வாசிம் அக்ரம் 

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அனைத்தையும் இந்தியா முதன்முறையாக தனித்தே நடத்துகின்றது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 உலகக் கோப்பைப் போட்டிகளை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்துடன் சேர்ந்து நடத்தியது இந்தியா. இப்போது தனித்து நடத்துவதால் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையை வெல்வது சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது….

Read More

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்தது என்றும். பூமிக்கு அடியில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் ஹிண்டுகுஷ் மலைகளின் தெற்கு தென் கிழக்கு பகுதியை ஒட்டிய ஜுர்ம் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 100க்…

Read More

ரஷ்யாவில் புதின்- ஜின்பிங் சந்திப்பு 

ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் ரஷ்யா – சீனா வர்த்தக உறவுகள் அதிகரிக்கத் தொடங்கின. இது இரு நாடுகள் இடையே நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைனுக்கு திடீர் பயணம்…

Read More

10 ஆண்டு திட்டத்திற்கு ஒருதாய் பிள்ளைகள் போல் ஒத்துழையுங்கள்: ஜனாதிபதி ரணில்

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகல கடன்களையும் மீள செலுத்தி கடன் பெறாத நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,   நாமனைவரும் ஒரு தாய் மக்களாக செயற்பட்டால் இலங்கையை உலகின் பொருளாதார மையமாக மாற்ற முடியும்  என்றும்  தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை சற்று முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பின்னர் சபையில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

Read More

விஜய் பற்றி ராஷ்மிகா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னடம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.ராஷ்மிகா நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் வாரிசு…

Read More

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக மனுத்தாக்கல்

உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பான நிதியை முடக்குவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நிறைவேற்ற நிதியமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Read More

இலங்கை வங்குரோத்தான நாடு அல்ல:ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) விடுத்துள்ள…

Read More