இன ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் நடைபயணம்

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு கால் நடையாக நடை பயணம் ஒன்றை இன்றுஆரம்பித்துள்ளார். நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூர நோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும். நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல, மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும்…

Read More

பளையில் கஞ்சா விற்ற பொலிசார்

கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில்…

Read More

‘என் வீட்டுப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்குவேன்” – ராஷ்மிகா மந்தனா

“நான் வீடு திரும்பினால் வீட்டில் உள்ளவர்களின் காலில் விழுந்து வணங்குவேன். வீட்டுப் பணியாளர்களின் காலையும் தொட்டு வணங்குவேன்” என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனம்பெற்றுள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பழக்க வழங்கங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “சிறிய விஷயங்கள் கூட எனக்கு முக்கியமானவை தான். நான் காலையில் எழுந்து எனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவேன்; தொடர்ந்து என் நண்பர்களை…

Read More

சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் – மைத்திரி

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று…

Read More

இலங்கைக்கு IMF கடன் கிடைத்தது – நிதியமைச்சு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த தினம் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஊழல் ஒழிப்பு சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

Read More

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய…

Read More

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் 10 இலட்சத்தினால் அதிகரிப்பு 

கனடாவின் சனத்தொகை ஒரு வருட காலத்தில் சுமார் 10 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி கனடாவின் சனத்தொகை 39,566,248  ஆக இருந்தது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் கனடாவின் சனத்தொகை 38,516,138 ஆக இருந்தது. அதாவது, 12 மாத காலத்தில் கனடாவின் சனத்தொகை 1,050,110  பேரினால் அதிகரித்துள்ளது. இது ஒரு வருட காலத்தில் ஏற்பட்ட 2.7 சதவீதமான அதிகரிப்பாகும். கனடாவில் வரலாற்றில் 12 மாத காலத்தில் சனத் தொகை ஒரு மில்லியனுக்கும் கூடுதலான எண்ணிக்கையினால் அதிகரித்தமை…

Read More

பால் மா விலை குறைப்பு

இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அடுத்த வாரம் முதல் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More

இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை மீனா

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கும் மீனா நாயகியாக மார்க்கெட் குறைந்ததும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது, அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பதுமாக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் நடித்திருந்தார். படங்கள் நடித்துக் கொண்டு குடும்பத்துடனும் சந்தோஷமாக இருந்த மீனா வாழ்க்கையில் கடந்த வருடம் சோகமான விஷயம் நடந்தது, அதாவது அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பில்…

Read More