கியூபாவில் செப்டெம்பர் மாதம் கியூபாவில் நடைபெறவுள்ள ஜீ 77 சீன உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரெஸ் மார்செலோ கோன்சாலஸினால், கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெலின் அழைப்புக் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கியூபாவின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
‘அபிவிருத்தியின் தற்போதைய சவால்கள்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு’ என்ற தொனிப்பொருளில் செப்டெம்பர் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கியூபாவில் இந்த உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.
1964இல் அணிசேரா நாடுகளால் நிறுவப்பட்ட ஜீ 77 உச்சி மாநாடு 134 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. இது அதன் உறுப்பு நாடுகளின் கூட்டுப் பொருளாதார நலன்களை ஊக்குவிப்பதோடு , ஐக்கிய நாடுகள் சபையில் கூட்டு பேச்சுவார்த்தை சக்தியையும் உருவாக்குவதாகவும் காணப்படுகிறது.

