“இளம் தலைமுறையை நினைத்து பரிதாபம் கொள்கிறேன்” – AI குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தருதல் என மொழி சார்ந்த செயல்பாடுகளை மிக அதிவேகமாக சாட் ஜிபிடி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக…

Read More

பிளே ஸ்டோரில் 3,500+ கடன் செயலிகளை நீக்கிய கூகுள்

கடந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை (லோன் ஆப்) பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள். இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் விதிகளை மீறிய காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் நிதி சேவை சார்ந்த செயலிகளுக்கான கொள்கைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அவ்வப்போது இந்த கொள்கைகளை அப்டேட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது கூகுள். மொபைல் போன் செயலி மூலம் பயனர்களுக்கு கடன் வழங்கும் செயலிகள் கடந்த 2021 முதல் ரிசர்வ் வங்கியிடம்…

Read More

சம்சுங் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க சம்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு சம்சுங் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 96% லாபம் குறைந்துள்ளதால் மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் செயல்பாட்டு இலாபம் 366 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக சம்சுங் தெரிவித்துள்ளது. கடந்த கொவிட் காலத்தில் சந்தையில் மெமரி சிப் விற்பனை அதிகரித்திருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் – விஞ்ஞானி

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் இன்டர்நெட்…

Read More

பூமியிலிருந்து மெல்ல விலகும் நிலவு

பூமியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீ.விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்துவருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கிய 3 வீரர்கள்: மாற்று விண்கலத்தை ஏவிய நாசா

மாஸ்கோ : விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கியுள்ள 3 வீரர்கள் பூமிக்கு திரும்பும் வகையில் மாற்று விண்கலத்தை நாசா ஏவியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் MS-22 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி வீரர் Francisco Rubio, ரஷ்ய விண்வெளி வீரர்கள் Sergey Prokopyev, Dmitry Petelin…

Read More

இலங்கை சந்தையில் புதிய மோட்டார் சைக்கிள்

கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் வாகன சாவி மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இலங்கை வங்கியின் முழுமையான…

Read More

இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தயார்

கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது. கொழும்பு – மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச்…

Read More

10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம்: எலான் மஸ்க்

 ட்விட்டர் தளத்தில் வெகு விரைவில் பயனர்கள் சுமார் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அம்சம் குறித்த அறிவிப்பை ட்வீட் மூலம் மஸ்க் பகிர்ந்துள்ளார். மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். தற்போது நீல சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய…

Read More