நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’,…

