ஜப்பான் இலங்கைக்கு இடையே ஒப்பந்தம்

பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி´ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (JICA) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும்…

Read More

விரைவில் புதிய வரி – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால், இலங்கையின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேர்மறையான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வறிய மக்கள் மீதான VAT போன்ற வரிச் சுமையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி…

Read More

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது – சந்திரிகா

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பயங்கரவாத தடைச்சட்டம்  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர்…

Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Read More

வட -கிழக்கில் சைவமக்கள் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

வடக்கு கிழக்கிலுள்ள சைவசமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சைவக்கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து…

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – ஜனநாயக விரோத சட்டம்: ஜே.வி.பி

அரசாங்கம்  புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களில் அறிவுறுத்தும் ஊடகவியலாளரும் பயங்கரவாதியாகவே கருதப்படும் என மக்கள் விடுதலை முன்னணி ஊடகப்பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் புதிய பங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்…

Read More

சாரா ஜஸ்மின் இறப்பு உறுதியானது

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மினும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாவது முறையாக பெறப்பட்ட நுண்ணிய மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ மாதிரிகள்…

Read More

பௌத்த மயமாக்கலை கண்டித்து ஒன்றிணையுங்கள்- மாவை அழைப்பு

தமிழர் பிரதேசங்களில்  ஆலயங்கள் அழிக்கப்படுவது மற்றும் பௌத்த மயமாக்குவதை கண்டித்து வியாழக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மதங்கள், கட்சிகள் கடந்து ஒன்றிணையவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளதுடன் வெடுக்கநாறிமலை ஆதிசிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

Read More

20 க்கும் மேற்பட்ட CPC ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

இன்று (29) சேவைக்கு சமூகமளிக்காத 20 க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் அவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

Read More