யாழ். இருபாலை சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் துஷ்பிரயோகம் 

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.  குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்…

Read More

SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ‘ஐஎன்எஸ் கில்தான்’ இந்திய கடற்படைக் கப்பலை

கொழும்பு துறைமுகத்தில் நடைபெறும் SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ‘ஐஎன்எஸ் கில்தான்’ என்ற இந்திய கடற்படைக் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் பார்வையிட்டார். நேற்று காலை கப்பலுக்கு சென்ற இராஜாங்க அமைச்சரை இந்தியாவின் இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டார். கொழும்பில் நடைபெறும் வருடாந்த இலங்கை – இந்திய கடற்படை கூட்டுப்…

Read More

வாபஸ் பெறுவதாக இருந்தால் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவும்

பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டாலும், குறித்த அந்த முடிவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், இதற்கு முன்னரும் மக்களால் எதிர்க்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்கம் வாபஸ் பெற்றாலும், பின்னர் தமது பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே அரசாங்கம் இந்த பங்கரவாத சட்டத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால், அது தொடர்பில் தெளிவான எழுத்துமூல அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

Read More

வெளிநாடுகளின் உதவியுடன் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்  – சுரேஸ் பிரேமச்சந்திரன்

அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து விடயங்கைள முன்னெடுப்பது தொடர்பில் ஈபிஆர்எல்எப் மத்தியகுழுவில் கலந்துரையாடப்படதாக அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கட்சியின் தீர்மானங்கள் தொடர்பாக தெரிவிக்கையில், ஜனநாயக அமைப்புக்கள்…

Read More

இலங்கை குறித்து உலக வங்கியின் அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.. கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேவைப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3 சதவீதமாக சுருங்கும் என்று அறிக்கை ஊடாக…

Read More

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும்…

Read More

வரி வருமானம் பாரிய அளவில் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன் ரூபாவும் வசூலித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மார்ச் மாதத்தில் 11,930 மில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரி வருமானத்தில் படிப்படியாக…

Read More

பால் விஷமானதில் 13 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் 13 சிறார்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் விடுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும், பரிசோதனைக்காக பொரளையில் உள்ள…

Read More

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா வைரஸ்

இன்புளுவன்சா A வைரஸ் சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய நாட்களில் பகலில் அதிகமாக உடல் வியர்ப்பதால் சிலருக்கு உடல் உபாதை, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். வேலை செய்ய முடியாத நிலை…

Read More

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த  க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து…

Read More