உள்ளூர்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்றதாக வேண்டும் – அமெரிக்க தூதுவர்
புதிய பயங்கரவாதஎதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதங்களை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும்என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். காலவாதியாகிப்போன சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான பயங்கரவாத எதிர்ப்பு சட்;டம் குறித்த புதிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பழையபயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து அதனை நீக்கப்போவதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அமெரிக்க தூதுவர்தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் நேர்மையான வலுவான கலந்தாலோசனைகள் இடம்பெறும் என…
சூரியன் இன்று நண்பகல் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம்…
மலையக பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன்…
சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பகுதியில் உள்ள தனது மனைவியின் பெற்றோரின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் என…
மற்றுமொரு படுகொலை
குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாவார். கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது, யுவதி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அரநாயக்க பொலிசார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி…
காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ்
காதலனுடன் சமனல வாவியை பார்வையிட வந்த யுவதியை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று…
உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள்
இலங்கை நாட்டு அரசியல்வாதிகளும் ஆரச தரப்பினரும் அரச பணியாளரும் இலங்கை நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டு மக்களினதும் மண்ணினதும் சுபீட்சமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என. யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தி தெரிவித்தாள்ளார் ஆயரின் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை 09 ஏப்பிரல் 2023இல் கொண்டாடும் வேளை இப்பெருவிழாவை இலங்கையிலும்…
கட்டுநாயக்கவில் மோசமான வானிலை -விமான சேவை பாதிப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50…
கொழும்பு – யாழ் ரயில் சேவை 2024இல் மீள ஆரம்பம்
கொழும்பு, கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார். வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளால், கடந்த ஜனவரி 5ஆம் திகதி முதல் கொழும்பு, கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ முதல்…
பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால் மேன்முறையீடு செய்வோம் – மைத்திரி
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால், அதற்கான திருத்தங்களை மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் வெள்ளிக்கிழமை (7) கொழும்பில் உள்ள சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த…

