உள்ளூர்
சீனாவுக்கு இலங்கை குரங்குகள் எதற்கு?
இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று இன்று (12) தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அங்கு உரையாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன, “விலங்கு ஒன்று வேறு நாடுகளுக்கு அனுப்பு முடியும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது மிருகக்காட்சிசாலைக்காக மட்டுமே ஆகும்.” “எனவே, இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்குகளையோ அல்லது விலங்கின் பகுதிகளையே ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது.” “சீனா இலங்கை குரங்குகளை கேட்கிறது என்றால்,…
போராட்டத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவர் -திஸ்ஸ விதாரண
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதவாத தடைச்சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள்…
7.1 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை
சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உத்தியோகபூர்வ குழுவை நியமிப்பதா அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இறுதி உடன்பாட்டை எட்டுவதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இறுதி முடிவை எட்டுவார்கள் என்று ரொய்ட்டர்ஸ் உடனான நேர்காணலில் மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன்…
தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்…
யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார். உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரம் – இந்திய ஜப்பான் நிதியமைச்சர்கள் விளக்கம்
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த செயற்பாட்டின் ஆரம்பம் குறித்து இந்திய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று கூட்டாக அறிவிக்கவுள்ளனர். வோசிங்டனில் இடம்பெறுகின்ற ஸ்பிரிங்கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உட்பட பலர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைக்கு கடன்வழங்கியுள்ள இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு குறித்து தீவிரகவனம் செலுத்திவருகின்றன. இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகளும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு 5 கோடி ரூபா நஷ்டம்
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 50 அரச மருந்தக நிலையகங்களின் (ஒசுசல) 26 இல் தேவையற்ற செலவுகள் அடங்கலாக பல்வேறு காரணங்களால் 2021 ஆம் ஆண்டில் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர , பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு அரச மருந்தகங்களில் 2020 ஆம் ஆண்டு, இலாபம் ஈட்டி இருந்த நிலையில்,…
மஹிந்த ரணில் அல்ல
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒப்பிடுவது பொறுத்தமற்றது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டை ஒன்றுப்படுத்தினாரே தவிர பிளவுப்படுத்த முயற்சிக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியில் இருந்து…
எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம்
எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று (11) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் வாக்குகள் மற்றும் வரைபடங்கள் அடங்கிய ஆவணம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் 3,820 தொன் உரம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா உரம் நெல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக விவசாய அமைச்சிடம், இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அண்மைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 72,200க்கும் மேற்பட்ட சிறுபோக நெல் விவசாயிகளுக்கு இந்த யூரியா உரம் வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து…

