உள்ளூர்
புதுவருட தினத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
நாட்டின் தென்பகுதி காலி -அஹுங்கல்ல மித்தரமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் புதுவருட தினமான நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 29 வயதானவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு சிறிய குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்…
இலங்கையுடன் கடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ்கிளப் அறிவிப்பு
இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளதாக பாரிஸ்கிளப் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான கடன்வழங்குநர்கள் குழு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பாரிஸ்கிளப் இதனை தெரிவித்துள்ளது. ஜப்பான் இந்திய நிதியமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதி அதன் பிரதிநிதிகளுடன் இணைந்து வியாழக்கிழமை இலங்கைக்கு கடன்வழங்கியவர்களின் குழுவை ஏற்படுத்தியுள்ளனர் என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. கடன்வழங்கியவர்களின் குழுக்கள் எதிர்கால கடன்நிவாரண உடன்படிக்கைக்கான வழிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு தலைமை வகிக்கவுள்ளன. தற்போதைய உத்வேகத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ள பாரிஸ்கிளப் நியாயமான கடன்சுமை பகிர்வு வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி; செய்வதற்காக…
இலங்கையில் இருந்து 1,00,000 குரங்குகள் சீனா வாங்குகிறது
இலங்கையில் இருந்து 1,00,000 குரங்குகளை சீனா வாங்குகிறது. அரிய இனமான டோக் மக்காக்(toque macaques) குரங்குகள் இனம் இலங்கைக்கு சொந்தமானது. மேலும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் ஆபத்தானதாக இந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இந்த இன குரங்குகள் எண்ணிக்கையானது சுமார் 30லட்சத்தை எட்டியுள்ளது. இவை உள்ளூர் பயிர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் உள்ள 1000 உயிரியல் பூங்காக்களுக்கு டோக் மாக்காக் குரங்குகளை கொண்டு செல்வதற்காக இலங்கை அரசிடம்…
இந்தியா – இலங்கை பயணியர் படகு சேவை; துறைமுக விரிவாக்க பணியில் கடற்படை
காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்துள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, நம் நாட்டின் துச்சேரியின் காரைக்கால் வரை, பயணியர் படகு போக்குவரத்து சேவை இம்மாத இறுதியில் துவங்க உள்ளது.இதன் வாயிலாக, காரைக்காலுக்கு இலங்கையில் இருந்து நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்து உள்ளது.
கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடி:யாழில் பெண் கைது
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலமாகியும் பயண ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், பணம்…
யாழில் மீண்டும் கொரோனா
யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை அடுத்து அப்பெண்ணை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைவடைந்தமையை அடுத்து , வைத்தியசாலைகளில் இருந்த தனிமைப்படுத்தல் விடுதிகள் அகற்றப்பட்டுள்ளமையால் , குறித்த பெண்ணை சாதாரண விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு…
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள் பங்குபற்றிய வேளையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லு மைரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஜனாதிபதி ரணில்…
‘நம் ரட்ட’ இணையத்தள வாசகர்களுக்கு சோபகிருது புதுவருட நல் வாழ்த்துக்கள்
அனைத்து வாசகர்களுக்கும் ‘நம் ரட்ட’ இணையத்தளம் சோபகிருது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நாள் (சித்திரை 1) தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றான இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாகும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகின்றது. 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் வருடத்தில் தற்போது சுபகிருது…
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்….
மீன் வலையில் சிக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி
மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திவெளி, வட்டையார் வீதியைச் 43 வயதுடைய கந்தையா பவானந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மீன்பிடிக்க சென்ற நபரை காணவில்லை என்று இன்று (13) காலை அவரது பிள்ளைகள் தோணியொன்றில் சென்று தேடியபோது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி…

