உள்ளூர்
2024 ஆம் ஆண்டுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் – ஜி.எல்.பீரிஸ்
2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அரசாங்கம் படுதோல்வி அடையும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று கிடையாது.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அரசாங்கம் படுதோல்வி…
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இன்று (18) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இடம்பெறும் முதலாவது மூலோபாய உரையாடல் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த…
இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவில் கொவிட்
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற 2 பேருக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த 2 பேரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ´த ஹிந்து´ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதோடு, மேலும் திங்கட்கிழமை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 60,313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் உதவியுடன் செய்மதி தளம் – இந்தியா கவலை
சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. மியன்மாரின் கொக்கோ தீவுகளில்இராணுவதளமொன்று உருவாக்கப்படுவதும் இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமும் பிராந்தியத்தில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த கரிசனையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளன என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இராணுவதளமும் தொலைதூர செய்மதி நிலையமும் சீனாவின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்படுவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்தியாவின்…
யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்
“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும்…
DJ இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு
காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவு வேளையில் இடம்பெற்ற டீஜே இசையை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இரண்டு சந்தேகநபர்கள் வந்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில்…
பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கி
பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் வெற்றிபெற வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்புகளுக்கு இடையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் மார்ட்டின் ரேஸருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான…
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம்-எதிர்க்கட்சித் தலைவர்
மக்களுக்கு பயந்த, மக்கள் அபிப்பிராயத்தை ஊசலாட்டும் திறமையற்ற தற்போதைய அரசாங்கம் 24 மணிநேரமும் 365 நாட்களுமாக தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தினால் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தும் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பது மக்கள் பயத்திற்கே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அவ்வாறே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாகமக்களின் எழுச்சியைக்…
கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும். இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

