உள்ளூர்
அமைதியைப் பேணுவதற்கு முப்படையினர் கடமையில்அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!
அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் அமுலாகும் வகையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இந்த வர்த்தமானி அறிவித்தல் புதுப்பித்து வௌியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண் படகு மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 3 பெண்களும் இரண்டு ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர். சடலங்கள் நீதவான் விசாரணைகளுக்கான குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன ஏன் பொறுப்பு கூற வேண்டும் ? தயாசிறி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவராகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கூட இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனவே இதனுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சு.க. தொகுதி அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதன் பின்னர்…
சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவர் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எமது அரசாங்கத்தில் சுயாதீன தேசிய விசாரணைகளுக்கு அப்பால் சுயாதீன சர்வதேச விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் , விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்னும் நியாயம் வழங்கப்படவில்லை?…
உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில்…
வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 23 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு பயணிக்க முயன்று, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 23 பேர் மீள நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 303 இலங்கையர்களுடன் பயணித்த வியட்நாம் கொடியைத் தாங்கிய மீன்பிடிப் படகு கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி வியட்நாம் கடலில் மூழ்கியது. இவர்கள் இலங்கை கடற்படையின் மீட்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வியட்நாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 151 பேர் ஏற்கனவே அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், மேலும் 23 பேர் கடந்த…
மார்ச் மாதத்தில் பணவீக்கம் கணிசமாகக் குறைவடைந்துள்ளது
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், மார்ச் மாதத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு அல்லது பணவீக்கம் கணிசமாகக் குறைவடைந்துள்ளது. பெப்ரவரியில் 53.06 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், மார்ச் மாதத்தில் 49.2 வீதமாக குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, மார்ச் மாதத்தின் உணவுப் பணவீக்கம் 42.3 மூன்று வீதமாகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும், உணவு அல்லாத பணவீக்கம் தொடர்ந்தும் 54.9 வீதமாகக் காணப்படுகின்றது.
அரசாங்கம் தயங்குவது வேதனையளிக்கிறது !பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொள்ள முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையிலேயே பேராயர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும்,…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள் வெள்ளிக்கிழமை (21) காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் நினைவுத் திருப்பலியானது காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, காலை 7…
புதிதாக 1,320 வைத்தியர்கள் நியமனம்
நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட…

