உள்ளூர்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (23) 7 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்தனர். இந்நிலையில் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோதே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மற்றும் சங்க தலைவி கா.ஜெயவனிதா ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல்…
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு அழைப்பு விடுக்கக்கோரி தமிழகத்திலிருந்து அமைச்சருக்கு கடிதம்
இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயண குழுவுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, தமிழ்நாடு – இராமநாதபுரம் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயண குழுவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :…
ஓரிரு மாதங்களுக்குள் வடக்கு, கிழக்கில் பாரியளவில் காணிகள் விடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 20 000 ஹெக்டயர்களுக்கும் மேற்பட்ட காணிகள் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விற்பனையின் போது 60 வீத இலாபம் கிடைக்கப்பெறுகிறது. ஆனாலும் சில இடைத்தரகர்களால்…
கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து ; ஒருவர் பலி ; 9 பேர் காயம்
கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன் எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ…
பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை: விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்!
பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்….
இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை
வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த்…
20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் – ரமேஷ் பதிரண
இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த…
பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுயாதீன விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் உன இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிலநாட்களிற்கு முன்னர் நாரம்மலவில் இடம்பெற்ற சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச்செயல்களிற்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படு;ம் விதம் குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ள போதிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதனை தொடர்வதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…
இன்று முதல் கொழும்பில் CCTV நடைமுறை!
கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று முதல் வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் குறித்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தம் குறித்த கலந்துரையாடல் இன்று!
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (22) கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது. குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் சேர்க்கும். பின் 3 வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை…

