உள்ளூர்
பேர்ள் கப்பல் தீ விபத்து : இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்கு தாக்கல்
எஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சஞ்ஜய இராஜரட்ணம் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் மேலும் தெரிவித்தார். இது குறித்து கடல்சார்…
நெடுந்தீவு படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. புங்குடுதீவு பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜேர்மனியில் சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் நாடு திரும்பியவர்…
நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் வௌியீட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே இவர்கள் விஜயம் செய்துள்ளனர். சிவாஜி கணேசனின் வெற்றிக்கு காரணம் அவரது வசனமா அல்லது உடல் மொழியா எனும் தலைப்பில் பட்டிமன்றமும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
மரதன் ஓட்டப் போட்டியில் சகோதரனின் உதவிக்காக ஓடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியின் போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் பலாகல , குடாஹெட்டியாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன் போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் உதவிக்காக ஓடிக் கொண்டிருந்த சிறுவர் திடீரென வீதியில் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கலாவௌ கிராம…
பேர்ள் கப்பல் விவகாரம் :உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப்புலனாய்வு பிரிவு
சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவரால் இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் நாட்டின் சமுத்திர பரப்பிற்கு ஏற்பட்ட மாசுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அரசாங்கத்தின் உயர்…
நீர்வீழ்ச்சியில் குதித்து காணாமல் போன தாய் சடலமாக மீட்பு
குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு தனது இரு பிள்ளைகளுடன் இவர்…
டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்த பெண் மாயம்
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியின் மேற் பகுதியிலிருந்து இருந்து குதித்து காணாமல் போயுள்ளார். குடும்ப தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த குறித்த பெண் இன்று (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணைத் தேடும் நடவடிக்கையை திம்புல்ல பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பொய்யான தகவல் வழங்கியதாக கைதானவருக்கு விளக்கமறியல்
அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது சந்தேகநபர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (22) பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
உயர் வெப்பநிலை !கர்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். மகளிர் மற்றும் சிறுவர் வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வழக்கமாக 2 லிட்டர் தண்ணீர் அருந்துபவர்கள் தற்போது சுமார் 3 முதல் 4…
அக்குரணையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலித் தகவல் வழங்கிய நபர் கைது
அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலியான தகவலை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் கணினிக் குற்றவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அக்குரணை நகரில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இரண்டு சந்தர்ப்பங்களில் 118 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை…

