உள்ளூர்
முட்டை இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் குழு
முட்டை இறக்குமதி செய்வது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அடங்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இதுவரை 05 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மேலும் 02 மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தில் உள்ளதாக அமைச்சர் கூறினார். அவற்றை விடுவிப்பதற்கு தேவையான அறிக்கை நேற்று(24) வரை…
பலாலி கடற்கரையில் 8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் பலாலி – அந்தோனிபுரம் கடற்கரையில் 08 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 26 கிலோகிராமிற்கும் அதிக கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பலாலி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை வழிபாடுகளை தடுக்கக்கூடாது – வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு
வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா வடக்கு, ஒலுமடுவிலுள்ள தொல்பொருள் சிறப்புமிக்க வெடுக்குநாறிமலை, ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அண்மையில் சேதமாக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வெடுக்குநாறிமலை பகுதியில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில்…
இன்று கூடுகிறது பாராளுமன்றம்
பாராளுமன்றம் இன்று(25) காலை கூடவுள்ளது. நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்ததை போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், இன்றைய பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சி யாப்பிற்கமையவே பீரிஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார் ; நீதிமன்றத்தை நாட முன் மனசாட்சிக்கமைய சிந்திக்க வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பிற்கமையவே தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் அவர் மனசாட்சியுடன் சந்தித்து செயற்பட வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உடுகம்பொலவில் அமைந்துள்ள மறைந்த அரசியல்வாதி ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்தில் அவரது 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்…
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்க நேரிடும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீண்டும் இழக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பல இலட்சக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். எனவே அரசாங்கம் இதனை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , 2018 இல் ஆட்சி…
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்புஜனாதிபதியிடம் மீண்டும் உறுதியளித்தது சீனா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் மியாவ் ஜியான்மின் உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். இதன் போதே ஜனாதிபதியிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய முதலீட்டு முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் தனியொரு பெரிய…
சுற்றுலாத்துறை பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் போது இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுடன் சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான தீர்வுகளை வழங்குமாறும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சாகல ரத்நாயக்க பணிப்புரை…
இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!
அம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

