உள்ளூர்
இந்திய சுற்றுலா பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலப் பயணம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது. …
சூடானில் நிர்க்கதிக்குள்ளான 13 இலங்கையர்கள் மீட்பு
சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது இலங்கையர்கள் சவுதி அரேபியாவின் JEDDAH நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் 12 இலங்கையர்களை சூடானிலிருந்து வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சூடானில் தொடர்ந்தும் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன் வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எகிப்தின் நைரோவில் உள்ள தூதரகம், காடோன் நகரில் உள்ள கன்சியுலர் அலுவலகம், சூடான் அதிகாரிகள் மற்றும்…
வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் வெளியான புதிய சுற்று நிரூபம்
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபமொன்று வௌியிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த சுற்றுநிருபத்தை வௌியிட்டுள்ளது. இதற்கமைய, இரண்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. அத்துடன், தொழிலுக்காக வௌிநாடு செல்லும் 45 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுநிருபத்திற்கமைய, 18 வயதிற்கு குறைவான திருமணமாகாத பிள்ளைகளை…
நெடுந்தீவில் ஐவர் கொலை: சந்தேகநபருக்கு மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்
யாழ். நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 48 மணித்தியாலங்கள் தடுப்பு வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நேற்று (25) காலை ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டார். யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை மன்றில் ஆஜர்படுத்தினர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி…
4 மாதங்களுக்குள் 9 நில அதிர்வுகள் – புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 09 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 04 மாதங்களுக்குள் 09 தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகிய முதலாவது சந்தர்ப்பம் இதுவென பணியகம் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலன நில அதிர்வுகள் நாட்டின் உட்பகுதியில் பதிவாகியுள்ளதுடன், சில நில அதிர்வுகள் நாட்டை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன. அதிகூடிய மெக்னிடியூட் அளவான நில அதிர்வு புத்தல – சூரியவெவ பகுதியில் பதிவாகியிருந்தது. நாட்டில் பதிவாகிய நில அதிர்வுகள் தொடர்பான தரவுகள்…
கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட போதைப்பொருள்
கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகும்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை
பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்
வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் பொதுமக்கள் உட்பட அனைவருடைய பூரண ஆதரவுடன் இன்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதையும் நிறுத்தக் கோரியும், மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள…
பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் வெளிக்கள செயற்பாடுகளை ஏற்பாடு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் – இலங்கை மருத்துவ சங்கம்
அதிகளவில் வெப்ப நிலை நிலவும் நேரமான முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொது வெளியில் எந்தவொரு செயற்பாடுகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வி.ஆரியரத்ன தெரிவித்தார். அத்தோடு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் இந்தக் காலப்பகுதியில் எந்த வகையான வெளிக்கள செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர்…
வரி வருமானம் அதிகரிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், வருவாய்த் திணைக்களம் 146,565 மில்லியன் ரூபாவை வசூலித்திருந்தது. இதன்படி, கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 216 வீத அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீட்சியடைந்தமை மற்றும் வரி நிர்வாகத்தின் வினைத்திறன் அதிகரிப்பு…

