உள்ளூர்
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களில் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட…
7 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் 26ஆம் திகதி புதன்கிழமை 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டது – யாழ். ஆயர்
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. அத்துடன் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலருக்கு…
விமலின் கருத்துக்கு அமெரிக்க தூதுவர் மறுப்பு
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார். ‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது…
வசந்த கரணாகொடவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு அமெரிக்கா பயணதடை விதித்துள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள வசந்த கரணாகொடவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாட்டுச்செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச்சட்டம் 2023 இன் பிரிவு 7031 இன் கீழ் வசந்தகரனாகொடவை இந்த பட்டியலில்…
ஜனாதிபதியின் விஷேட கோரிக்கை
இலங்கை தனியார் கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலுக்கு முன்னர் பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே மேடையில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து உரையாற்றி ஜனாதிபதி, 2022 ஜூலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு கிட்டத்தட்ட…
சினோபெக் நிறுவன அதிகாரிகள் இலங்கை விஜயம்
இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். குழுவுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று அமைச்சில் இடம்பெற்றது. அங்கு ஒப்பந்தம் தொடர்பான அட்டவணைகள், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே…
பெண் ஊடகவியலாளர் மீது நிறுவன அதிகாரி பாலியல் தொந்தரவு : விசாரணைக்கு குழு நியமிப்பு !
சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளரான பெண் ஒருவரை அதே தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரியொருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்டத்தரணியின் தலைமையில் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் செயலாளரிடம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை முறைப்பாடு…
எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பல் விவகாரம் – சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தின் கப்பல் மூலம் இலங்கை கடலில் ஏறபட்ட பாதிப்புகளிற்கு இழப்பீட்டை கோரும் வழக்கை இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம் இதனை உறுதி செய்துள்ளார்.சிங்கப்பூரில் உள்ள சட்டநிறுவனமொன்றின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இழப்பீட்டு தொகை குறித்து நீதிமன்றத்திற்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளை செயற்படுத்த ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும் – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்த ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை திறைசேரி மேற்கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு பதிலளித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார். இதன்போது எழுந்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இராச்சியங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்களை சட்டமாக்குவது தொடர்பில் சர்வதேச…

