உள்ளூர்
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி
நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் மேலும்…
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்த இடமளியேன்! மே தின செய்தியில் ஜனாதிபதி உறுதி
நாட்டில் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்குக் காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில்…
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த சடலம்
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதனை அவதானித்த பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீதான விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையை மேற்கோள் காட்டிய இம்ரான் கான்
நாட்டில் ஆட்சியிலுள்ளவர்கள் உரிய காலத்தில் உரிய முறையில் தேர்தலை நடத்தாவிட்டால் இலங்கையில் எழுந்துள்ள நிலையை போன்றே தமது நாட்டிலும் உருவாகும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தமது நாட்டில் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற பாரியதொரு நம்பிக்கையில் இருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாக்குரிமையை தடுத்தால் அவர்கள் வீதிக்கு இறங்கி வன்முறையில் ஈடுபடும் போது அவர்களுடைய பலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என அவர் மேலும்…
இன்று மே தினம்
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று திங்கட்கிழமை (மே1) கொண்டாடப்படவுள்ளது. கடந்த 2020 , 2021ஆம் ஆண்டுகளில் கொவிட் தொற்று , 2022இல் பொருளாதார நெருக்கடிகளால் மேலெழுந்த ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றால் மே தினக் கூட்டங்கள் சம்பிரதாய பூர்வமாக நடத்தப்படவில்லை. எனினும் இம்முறை இந்த நெருக்கடிகளிலிருந்து நாடு ஓரளவிற்கு மீண்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான கட்சிகள் அவற்றின் மே தினக் கூட்டங்களை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிலையில் கட்சிசார்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி…
எரிபொருள் விலை குறைப்பு
ஞாயிறு (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக…
மே தினக் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
நாட்டின் பல பகுதிகளிலும் திங்கட்கிழமை (மே1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டங்களை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பு , கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவான கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளமையால் அங்கு 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொழும்பு நகர் ,…
ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்
3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை பிரித்தானியா செல்கிறார். சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையை அலங்கரித்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு…
இந்திய விமானப்படை தளபதி இலங்கை வருகிறார்
பிராந்தியங்களுக்கிடையிலான சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள், கூட்டுப்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக திங்கட்கிழமை (மே 1) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இது தொடர்பில் இலங்கை விமானப்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது: விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்புக்கமைய, இந்திய விமானப்படைத் தளபதி…
இலங்கையர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்டு மெரைன் பொலிசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பெயரில் மெரைன் பொலிசார் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்று பார்க்கும் பொழுது அரிச்சல் முறை கடற்…

