பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார் இந்திய விமானப்படை தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் திங்கட்கிழமை (மே 02) இடம்பெற்றது.  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பரஸ்பர நன்மை மற்றும்…

Read More

தடை விவகாரம் – வசந்த கரணாகொட அமெரிக்க தூதுவருக்கு கடுமையான கடிதம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு கடுமையான கடிதமொன்றை எழுதியுள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அமெரிக்க தூதுவர் தனதும் தனது குடும்பத்தினதும் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.45 வருட குற்றமற்ற அரசசேவையின் மூலம் நான் ஏற்படுத்திக்கொண்ட கௌரவத்;திற்கு நீங்கள் சுமத்தியுள்ள தவறான குற்றச்சாட்டுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள வசந்தகாரணகொட ஐசிசிஆர்பியின் 17 வது பிரிவின் கீழ் உங்கள் நடவடிக்கைகள் எனது உரிமை மீது நேரடியாக தலையிடுகின்றன எனவும் அமெரிக்க…

Read More

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது. எனவே இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நிலைமை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வரை 28 918 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது பாரிய அதிகரிப்பாகும். டெங்கு…

Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் குறித் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரினவாத மேலாதிக்கத்தின் தமிழினவழிப்புச் சிந்தனையின் கொடிய கோரப்பற்கள் முள்ளிவாய்க்கால் மண்ணின் பிடியில் அடைக்கலம் அடைந்த ஈழத்த்தமிழினத்தின் இதயத்தில் ஆழப்பதிந்த நாட்கள் கடந்துபோய் 14 ஆண்டுகள் நிறைவடையும் நாள் மே 18. மனிதாபிமானத்தையும் மனித…

Read More

இந்திய நிதியமைச்சரை சந்தித்த அலி சப்ரி

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொரியாவின் சியோலில் இன்று (03) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 வது ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான பொருளாதார கூட்டாண்மை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Read More

தேர்தல் மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9-ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் இதன்போது உத்தரவிட்டனர். மார்ச் மாதம்…

Read More

நிதி ஆணைக்குழுவிற்கு 3 புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

3 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சபரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(02) 75 மில்லிமீட்டர் வரையான மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது….

Read More

கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் ஆறாவது நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துறைமுகத்துடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி தளத்திலிருந்து இரும்பு திருடச் சென்ற இருவரை விசாரனை செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச மக்களால் அமைதியின்மையின்மை ஏற்பட்டுள்ளது.  இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ப்ளூமெண்டல் பகுதியை சேர்ந்தவர்களே…

Read More

முன்னோக்கிப் பயணிக்க இனப்பிரச்சினைக்கான தீர்வு அவசியம் !பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்பட வாருங்கள் – தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படாது தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இடம்பெற்றது. கட்சி சார்பின்iமையை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

Read More