உள்ளூர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனையின் கீழ் மீன்சாரத்துறையில் மறுசீரமைப்பு
நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் , மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம்படுத்தும் போது…
‘டெங்கு 3 வைரஸ்’ நோயாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்!
பாடசாலை மாணவர்களில் 24 சதவீதமானோருக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – பேராசியர் சந்திம ஜீவந்தர நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் 24 சதவீதமானோருக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாண்டு ‘டெங்கு 3 வைரஸ்’ பரவ ஆரம்பித்துள்ளமையானது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை பாரியளவில் அதிகரிக்கச் செய்யக் கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூட நோய் எதிர்ப்பு…
மஹிந்த குடும்பத்தின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்
மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.எம்.எப் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்பட வேண்டும் என…
யாழ்ப்பாண சிறைச்சாலையில் 14 கைதிகள் விடுதலை
வெசாக் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள் , தண்ட பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. 3ஆவது சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார். இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடனை…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய தீர்மானம்! அமைச்சர் காஞ்சன விஜேசேகர தகவல்
450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வௌிநாட்டு எண்ணெய் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்குள் புதிய விநியோகத்தர்கள் இலங்கையில் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் நேற்று (04) நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று முற்பகல் கொழும்பு மன்றக் கல்லூரியில் எரிபொருள் நிலைய உரிமையாளர்களை சந்தித்தார். புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை…
மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானம்
கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் நேற்று முதல் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று பகல் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத் இலங்கசிங்க குறிப்பிட்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையும்(05) நாளை மறுதினமும்(06) இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உறவினர்களைப் பார்வையிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(04) அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

