உள்ளூர்
நுவரெலியா இனி சுற்றுலா நகரம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (08) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை…
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம் கூறியுள்ளது. மேலும் 08 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள்இன்று (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த விடைத்தாள்கள், வௌி மாகாணங்களில் அமைந்துள்ள 10 மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி
இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை…
பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு
களுத்துறை நகரில் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மாணவியின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி நேற்று மதியம்…
கடலில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவர்கள் பலி
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த…
கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முயன்ற ஐவர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 06 பேர் மன்னாரில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் உள்ளடங்குகின்றனர். சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்லவிருந்த 05 பேரும் மன்னார் பள்ளிமுனை பகுதியிலிருந்து செய்யப்பட்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த 5 பேரும் வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என்பதுடன் அவர்களில் 07 மற்றும் 14 வயதான சிறுவர்களும் 16 வயதான சிறுமியும் 38 வயதான ஆண் ஒருவரும் 37 வயதான பெண்ணொருவரும்…
ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்
சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பிரதமர் பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கலைவதற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இந்த ஆளுநர்கள் பதவி விலகவில்லை என அவர்…
அப்புதளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து
அப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் அப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, காயமடைந்த குறித்த கொள்கலன் ஊர்தியின் உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தினால், குறித்த வீட்டுக்கு…
இந்தியாவின் நிதியுதவியில் விமானப்படை கல்லூரியில் நவீன கேட்போர் கூடம்
நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையால் நன்கொடையாக சீனக் குடாவில் அமைந்துள்ள விமானப்படை கல்லூரியில் புதிய கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இந்திய விமானப்படை பிரதானி எயா சீப் மார்ஷல் வீ ஆர் சௌத்ரியால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள புதிய கேட்போர் கூட கட்டடத்துக்குள் 700 பேர் அமரக் கூடிய வசதி காணப்படும். 6 மாதங்களுக்குள் சகல நவீன வசதிகளுடன் இந்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படை…
இலங்கையின் அணிசேரா கொள்கையை மதிக்கின்றோம்- ரஷ்ய தூதுவர்
இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நாட்டை மாத்திரமின்றி யுத்தத்துக்கு அனுசரணை வழங்கும் ஏனைய மேற்குலக நாடுகளையும் ரஷ்யா மீண்டும் தோல்வியடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவு கூரும் வகையில் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில்…

