உள்ளூர்
IMF இன் பணிப்பாளரை இலங்கைக்கு அழைக்க தயார்!
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்றும் யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது எனவே, தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான…
அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை வரை படத்தில் இருந்து மன்னார் தீவை முற்றாக அழிக்க முயற்சி
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மத தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். -மன்னார்…
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த நெல்லியடி இளைஞன் மீது வாள் வெட்டு!
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து சிலர் அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்தீபன் (30) எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று (25) மாலை ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ் கிறீம் வாங்குவது போல நடித்து இளைஞனிடமிருந்த பணம்…
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் : நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களை அரசாங்கம் உள்வாங்கவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி
சபாநாயகர் நிகழ்நிலைபாதுகாப்பு சட்டத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் சிலவற்றை அரசாங்கம் உள்வாங்கவில்லை என்பதால் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் சபாநாயகர் கட்சிதலைவரின் கூட்டத்தினை கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தியின் ஹர்சனராஜகருண தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகளை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உள்வாங்கவில்லை என்பதால் சபாநாயக அந்த சட்டத்தினை அங்கீகரிக்க கூடாது எனவும் ஐக்கிய…
யுக்தியவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய இனந்தெரியாதவர்கள் – கொள்ளுப்பிட்டியில் சம்பவம்
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபேர்ட்டிசுற்றுவட்டத்தில் நேற்று மாலை யுக்திய நடவடிக்கைக்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தினை இனந்தெரியாத நபர்கள் குழப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தி மிரட்டும் இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு மிரட்டுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தனது முகத்தை மூடிய நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நபர்ஒருவரை தாக்குவதை வீடியோ காண்பித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காணமுடிந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் முறையாக நடைபெறும்!
2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.. பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வருடம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை…
சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் இளம் நாயகன்!
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன். குறிப்பாக இவ்வருடத்தில் நடக்கவுள்ள மலேசியாவில் நடைபெறவுள்ள Commonwealth Chess Championship, ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள World Cadet Championship, தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள World Youth Chess Championships, கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள Asian Youth Chess Championship, மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள Western…
TIN இலக்கம் தொடர்பில் விசேட அறிவிப்பு!
ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் பொதுவான முறை வழமைப்போன்று இடம்பெறும் நிலையில், பொது மக்களுக்கு மிக எளிதாக இதனை வழங்குவது தொடர்பில் நேற்று (23) இடம்பெற்ற ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன்…
7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை!
கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ்
ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு…

