உள்ளூர்
5 ரயில் சேவைகள் இரத்து
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று(10) காலை 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம் மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் களனிவௌி மார்க்கத்தின் 02 ரயில் சேவைகளும் குருணாகல் மற்றும் மொறட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார். அத்துடன், கொழும்பு – பதுளை இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையையும் இன்று(10) இரத்து…
நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார்(Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உலகின்…
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகேவிடம் வினவிய போது, நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என கூறினார்.
பிரதான சந்தேக நபர் கைது
மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த தனுஷ்க கயான் என்ற 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் காலி பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக, களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு…
ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
மண்டைதீவில் 85 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா திங்கட்கிழமை (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவியின் மர்ம மரணம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதி கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முன்னதாக மாணவி உயிரிழந்தது தொடர்பாக விடுதிக்கு அவருடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் நேற்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது குறித்த பாடசாலை மாணவி நேற்று (06) மாலை…
இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை லண்டனில் சந்தித்தனர்
ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது. முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய…
மன்னாரில் சிலையுடன் மூவர் கைது
தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான திருமால் சிலை வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்….
மஹிந்த, பசில் இருவருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை
முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு…

