உள்ளூர்
வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் – சுதந்திரக் கட்சி
வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருந்தால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. நாம் அதிகாரப்பகிர்வை எதிர்ப்பவர்கள் அல்லர். ஆனால், தேர்தலை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார் என்றால் அது நியாயமற்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும், வடக்கு – கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் அதிகாரப்பகிர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் நேற்று…
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை சகலரும் ஏற்க வேண்டும் – சரத் வீரசேகர
தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை பௌத்த சிங்கள நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, அதனை கோவிலாக திரிபுபடுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சியாம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் பாரிய அழிவு ஏற்படும் என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள்…
ஆசிரியரின் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துள்ளார். கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது…
காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை (12) வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெளிகல்ல, எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல்போயுள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தான் பணியாற்றும் மருந்தகத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றபோதே காணாமல்போனதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். கெலிஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை…
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் சைனா
சீன விமான சேவை நிறுவனமான எயார் சைனா ஜூலை மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் பெர்னாண்டோவின் தகவலின்படி, ஏயார் சீனா ஆரம்பத்தில் வாரத்துக்கு மூன்று விமான சேவைகளை இயக்கும் என தெரிய வருகிறது.
பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் , முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மாணவர்களும் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல்வேறு…
ரணில் – சம்பந்தன் சந்திப்பு இரத்து
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெறவிருந்த இரண்டாம் நாள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. அதன்படி அச்சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (15) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் வட – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் முதல்நாளான நேற்று முன்தினம் வியாழக்கிழமை (11) நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடப்படுமென ஏற்கனவே…
சிறுபோக உர கொள்வனவிற்காக கூப்பன் வழங்க தீர்மானம் – விவசாய அமைச்சு
சிறுபோகத்திற்கு தேவையான உர கொள்வனவிற்காக கூப்பன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு ஹெக்டெயருக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க கூறியுள்ளார். இந்த தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் காணப்பட்ட சிக்கல்கள் காரணமாக கூப்பன்களை வழங்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார். அதற்கமைய அச்சிடுவதற்காக கூப்பன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். அச்சு நடவடிக்கைகளுக்கு ஒரு வாரம் தேவை எனவும்…
மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது. யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தனிநபர் சட்டமூலமாக அண்மையில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன்பிரகாரம் 7 உறுப்பினர்களின் பெயர்கள், ஜனாதிபதியின் பரிந்துரைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கொள்வனவு, நிதி, கணக்காய்வு மற்றும் நீதித்துறை மற்றும் பொது சேவை ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் தேர்தல், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

