இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் இனால், அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பீச் கிராப்ட் “KA350 King Air” என்பது நவீன…

Read More

அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு – சஜித்

எதிர்கட்சியாக, அரச தரப்பிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினாலும், முற்போக்கு அரசியல் கட்டமைப்பில் சாதகமான நல்லவை நடக்கும் போது, அதைப் பாராட்டாமல் இருக்க முடியாது எனவும், நல்லதை நல்லது எனக் கூறி பாராட்ட இயலுமை இருக்க வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கையை அதிலிருந்து மீட்கும் பணியில், நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தால் அது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளின்…

Read More

திருகோணமலையில் வந்திறங்கிய தாய்லாந்து பௌத்த தேரர்கள்

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த தேரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை இயந்திரப்படகுகள் மூலமாக திருகோணமலை நகர இறங்குதுறையில் வந்திறங்கினர்.  இதன்போது பெளத்த தேரர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்பதை படங்களில் காணலாம்.

Read More

வவுனியாவில் சடலம் மீட்பு

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த்த நிலையில் ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுமகனொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.  இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தினை உறுதிப்படுத்தினார். சடலம் தடயவியல்பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Read More

சுயலாப அரசியலுக்காக எமது வலியை அரசிடம் அடகுவைக்காதீர்கள் – வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்

உள்ளகப்பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்து, சர்வதேச நீதி ஒன்றே எமக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற தெளிவான முடிவுடன் போராடும் எமது வலியை மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக இலங்கை அரசிடம் அடகுவைக்காதீர்கள்.  உங்கள் நலனுக்காக சிங்கள அரசிடம் எமது கண்ணீருக்கு விலை பேசாதீர்கள் என்று அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் அரசியல்வாதிகளிடம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதிக்கும் வட,…

Read More

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் அமைக்கப்படும் – ஜனாதிபதி

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிகுக்கு சவாலாக உள்ள போதிலும், அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 10ஆவது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது…

Read More

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவோம் -மைத்திரி

சமூர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் கடந்த 40 வருடங்களில்…

Read More

சுனாமி, யுத்தம், கொவிட் ஆகியவற்றில் கொள்ளையடித்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் உள்ளனர் – அநுரகுமார

சுனாமி, யுத்தம், கொவிட் பெருந்தொற்கு ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில்  அங்கம் வகிக்கிறார்கள். எங்கோ சென்ற கப்பலை நாட்டு அழைத்து, அழித்து கடலில் மூழ்கடித்து விட்டு தற்போது நட்டஈடு பெற்றுக்கொள்வதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. ஊழல் மோசடிகள் கடல்வாழ் உயிரினங்களையும் விட்டு வைக்கவில்லை. நாட்டு மக்கள் இவர்களின் செயற்பாட்டை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.நட்டஈட்டிலும் ஒரு தரப்பினர் கொள்ளையடிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

Read More

தலைமன்னார் பகுதியில் சிறுவர் கடத்தல்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று  இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (11)  வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த சாரதி இவ் வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்டுள்ளார். அச்சமயம் இரு பிள்ளைகளும் தப்பி…

Read More

நியூ டைமண்ட் கப்பல் விவகாரம்: கோட்டாபய பதிலளிக்க வேண்டும் – சந்திம வீரக்கொடி

இலங்கை கடலில் விபத்துக்கு உள்ளான நியூ டைமண்ட் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது சந்தேகிக்க நேரிடும் என எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்…

Read More