உள்ளூர்
பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்ததாக யாழில் பதற்றம்
யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை ஒருவர் நீண்ட நேரமாக அவதானித்துக்…
IMF பிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், சர்வதேசநாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரைச் சந்தித்தனர். இவ்வாண்டின் இறுதியில் முதலாவது மீளாய்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வழமையான ஆலோசனைகளின் ஓர் அங்கமாகவே சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் இலங்கைக்கான விஜயம் அமையப் பெற்றுள்ளது. நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக…
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸார் மீது விசாரணை
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10.05.2023 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன்போது ஏ-9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைகழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று குடித்தனர். வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்…
இரு வாகனங்களில் சிறுமிகள் கடத்த முயற்சி : ஒட்டிசுட்டானில் சம்பவம் : பொலிஸார் தீவிர விசாரணை
ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தில் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை இலக்கு வைத்தே குறித்த சம்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடித்து வீடு திரும்பும் போது இரு…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனைவரும் அணிதிரள வேண்டும் – மாவை சேனாதிராஜா
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனைவரும் அணிதிரள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். மே 18 முள்ளிவாய்கால் நினைவேந்தல் தொடர்பில அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு 1948ல் சுதந்திரம் கிடைத்தது. அந்தச் சுதந்திரம் தமிழர் தேசத்திற்கு,தமிழர் தேசமக்களுக்குக் கிடைக்கவில்லை. ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரம் தமிழர் தேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும் திரும்பப் பெறும் உருத்து இலங்கையின் பூர்வீகக் குடிமக்களுக்கு ஆண்டபரம்பரைக்குக் கிடைக்காதநிலையில்…
முள்ளிவாய்க்கால் கஞ்சி திருமலை சல்லி கிராமத்தில் பரிமாறல்
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை சல்லி கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – விஜேதாச உறுதி
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரச திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் பிரதி உதவி செயலாளர் அப்ரீன் அக்டரிற்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம்…
துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது
நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ் குழு இவ்வாறு காணாமல் போன துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதுடன் திருட்டு சந்தேக நபர் மற்றும்…
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி குறித்த அறிவிப்பு
அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் குறைக்கப்படாமல் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, குறிப்பிட்ட சிலருக்கு அரசினால் வழங்கப்படும் சிறுநீரக உதவி, முதியோர் உதவி உள்ளிட்ட பொது உதவிகள் குறைக்கப்படாமல் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். நட்டஈட்டுப் பலன்களை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் இரண்டாவது உப ஆவணத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி
மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார். மேல்மாகாண…

