மரக்கடத்தலின்போது துப்பாக்கிச் சூடு : சாரதி தப்பியோட்டம் 

சட்ட விரோத மரக்கடத்தலோடு தொடர்புடைய சந்தேக நபரான வாகன சாரதியொருவர் தப்பியோடியதோடு, அவ்வேளை ஏற்பட்ட வாகன மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவமொன்று இன்று அதிகாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: பறயனாளங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர்கள் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் சட்ட விரோதமாக மரக்கடத்தலில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கும் முயன்றுள்ளனர். அவ்வேளை சந்தேகத்துக்கிடமான கெப் ரக வாகனமொன்றை நிறுத்துவதற்காக வழிமறித்துள்ளனர்.  எனினும், குறித்த வாகனம் நிறுத்தப்படாமல்,…

Read More

தமிழ் இனப்படுகொலை – ஊர்திப் பவனி வரணியில் ஆரம்பம்

தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ஆம் திகதி தொடங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று…

Read More

மஹிந்த உள்ளிட்ட பலருக்கு பயணத்தடை நீக்கம்

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கான வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய ஆளுநர்கள் 3 பேர் பதவியேற்பு

3 புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – ஏகமனதாக தீர்மானம்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்த்து போட்டியிட்டு 41.99 சதவீத வாக்குகளை பெற்றுக் கொண்டார்….

Read More

இம்மானுவேல் ஆர்னோல்ட் பிணையில் விடுதலை

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் புதன்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக…

Read More

கண்டி விபத்தில் தந்தை, மகன் பலி 

கண்டி, பூவெலிக்கடையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (16) இரவு 8:00 மணியளவில்  கண்டி,  பூலிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தை தனது மகனுடன் வீதியைக் கடக்கும்போது ஜீப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் செலுத்திய  ஜீப் வண்டியே இவர்களை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. 41வயதுடைய ஒருவரும் அவரது 11 வயது மகனும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.  விபத்து தொடர்பில் முன்னாள் மாகாண சபை…

Read More

ஜெரோம் பெர்ணாண்டோ நாடு திரும்பியவுடன் கைதுசெய்யப்படுவார் – பொலிஸ் பேச்சாளர்

மதநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினரின் விசாரணையை எதிர்கொண்டுள்ள போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ நாடு திரும்பியதும் உடனடியாக கைதுசெய்யப்படுவார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  பொலிஸ் பேச்சாளர் நிகாதல்டுவ இதனை தெரிவித்துள்ளதுடன் ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு எதிராக நீதிமன்றம் பயணத்தடையை பிறப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சிஐடியினருக்கு ஜெரோம் பெர்ணாண்டோ தொடர்பில் பல முறைப்பாடுகள்  கிடைத்துள்ளன என  தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் செவ்வாய்கிழமை சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றம் தனிநபருக்கு எதிராக பயணத்தடை விதித்தால் அவர் நாட்டிலிருந்து வெளியேற முடியாது நாடு…

Read More

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு(16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.  நேற்றிரவு(16) 8.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Read More

3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வௌியாகியிருந்தன.  எனினும், அவ்வாறான அறிவிப்பொன்று எழுத்துமூலம் விடுக்கப்படாமையினால் தொடர்ந்தும் தமது பதவியில் தொடரவுள்ளதாக வார இறுதியில் கருத்து வௌியிட்ட ஆளுநர்கள் தெரிவித்திருந்தனர்.  எவ்வாறாயினும், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட…

Read More