உள்ளூர்
உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (18)உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது . ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் காலை 10 .30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் அனைத்து சுடர்களும் அஞ்சலிக்காக வருகைதந்த பொதுமக்களால் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மத தலைவர்கள் நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்த அதனை தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பொது சுடரினை 2009 இறுதிப் போரில் தனது 13 குடும்ப உறவினர்களை இழந்த தாயார் ஒருவர் ஏற்றிவைத்தார் . அதனை தொடர்ந்து நினைவேந்தல்…
கொழும்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பரபரப்பு
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு பொரளைப் பகுதியில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குழுவினர் பதாதைகளை ஏந்தியவாறு நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை குழப்பும் முகமாக செயற்பட்டனர். இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. இதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை அதிகரித்த நிலையில், பொலிஸார் குவிக்கப்பட்டனர். வடக்குகிழக்கில்…
இலங்கை கடற்பரப்பில் 125 கிலோ ஹெரோயின் பறிமுதல்
இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில் 125 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த பாரியளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்திய படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு…
4 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளான பெற்றோலிய பொருட்கள், எரிபொருளின் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (17) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னதாக, 2022 ஒகஸ்ட் 3, 2022 செப்டெம்பர் 3, 2022 ஒக்டோபர் 4, 2023 ஜனவரி 3, 2023 பெப்ரவரி 17ஆகிய திகதிகளில் இந்த சேவைகள் அத்தியாவசியமானது…
கடந்த கால தவறுகளை திருத்தியமைக்க முடியும்
முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் தள்ளப்பட்டமை மற்றும் தங்களது எதிர்காலம் தொடர்பில் இளையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரசாங்க அதிகாரிகள்…
மக்களுடைய போராட்டம் சிங்கள மக்களுக்கோ எதிரானது அல்ல – சட்டத்தரணி சுகாஸ்
தமிழ் மக்களுடைய போராட்டம் பௌத்தத்திற்கோ சிங்கள மக்களுக்கோ எதிரானது அல்ல. மாறாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். வடகிழக்கில் சிங்கள பௌத்தத்திற்கு ஆபத்து மோசமான விளைவுகள் ஏற்படலாம் என அஸ்கிரிய பீட பிரத்திப் பதிவாளர் கூறிய விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய தனியார் காணிகளை ஆக்கிரமித்து தமிழர் தாயகத்தின் வடகிழக்கு…
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை போன்று கிறிஸ்தவ அடிப்படைவாதம்-ஞானசார தேரர்
கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். வேண்டும். இஸ்லாமிய அடிப்படை வாதத்தை போன்று கிறிஸ்தவ அடிப்படைவாதத்தை உதாசீனப்படுத்தினால் பாரிய விளைவுகள் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ராஜகிரிய பகுதியில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜெரொம் பெர்னாண்டோ என்ற மதபோதகர் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை…
மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு அறிவிப்பு
முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி மௌனிக்கச் செய்யப்பட்டது. இந்த…
யாழ்.நாகபூசணி அம்மன் சிலையை அகற்றும் வழக்கு தள்ளுப்படி
யாழ்ப்பாணம், பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா,…
மன்னார் கிராம சேவகர் உட்பட 11 பேர் கைது
போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா நாட்டுக்குச் செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் சி.ஐ.டி.யின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை (17) கைது செய்துள்ளது. கைதுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் 36 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவராவார். ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர். இந்த சந்தேக…

