உள்ளூர்
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் வியாழக்கிழமை (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993…
இன்புளுன்சா பரவும் அபாயம் – எச்சரிக்கை
சிறுவாகள் சளி காய்ச்சல் இருமல் அல்லது சுவாசிப்பதில். பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை பாடசாலைகள் உட்பட எங்கும் அனுப்பவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபல் பெரேரா சிறுவர்கள் மத்தியி;ல் இன்புளுன்சா வைரஸ் வேகமாக பரவுகின்றது எனவும் எச்சரித்துள்ளார். இன்புளுன்சா வைரஸ் பாடசாலைகள் தனியார் வகுப்புகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வேகமாக பரவுகின்றது என அவர் எச்சரித்துள்ளார். சிறுவர்களிடம் இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை வேகமாக ஏனைய…
கடவத்தையில் துப்பாக்கிச் சூடு
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றிரவு காயமடைந்த நபர்…
பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை
பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர். மாணவர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பாராளுமன்றத்தின் கலரியிலிருந்து சபா மண்டபத்தில் நடைபெறும் செற்பாடுகளைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்புப் கிடைத்ததுடுன், பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்புறமாக குழுப் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர். இதன்போது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், முன்னாள்…
மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்
அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்து வகைகளின் விலைகளை குறைக்கக் கூடிய பெறுமானம் தொடர்பாக நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணக்காளர் பிரிவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு…
தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பு – புதிய தீர்மானத்தை சமர்ப்பித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்
தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர். அமெரிக்க காங்கிரசின் டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும்,நீடித்த அமைதியான அரசியல் தீர்வை காண்பதற்கு பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் இருகட்சி தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழ்இன அழிப்பின் 14 வருடநினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபட்ட தருணத்திலேயேஅமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்….
தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் கண்டனம்
தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது. கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார். இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் என கனடா பிரதமர்…
திருகோணமலையில் தடையையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கும் முகமாக திருகோணமலை பொலிஸாரினால் சில அமைப்புகளுக்கும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் வியாழக்கிமை (18) தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பல இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு தடைப்பட்டிருந்தபோதும் பல இடங்களில் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்திருந்தனர். அந்தவகையில் திருகோணமலை அலஸ்தோட்டம் இறை இரக்க ஆலயத்தில் இடம்பெற்றபோது.
8 ஆயிரம் கிலோ போதைப்பொருள் தொகை கண்டுபிடிப்பு
கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினரால் கண்டுபிடித்துள்ளனர். 8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164 மில்லியன் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (18) காலை ஒருகொடவத்த, கிரே லைன் 01 கொள்கலன் முனையத்தில் கொள்கலன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (சமூக பாதுகாப்பு பிரிவு) யூ.கே.அசோக ரஞ்சித்…
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்
தமிழ் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (18) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு, சரியாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, அதனை அடுத்து பொதுச்சுடரேற்றப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தில் 13 பேரை இழந்த மன்னாரைச் சேர்ந்ந தாயார் ஒருவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அதேவேளை சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால்…

